அரசு தடை செய்ய புகையிலை பொருள் விற்பனை : 3 கடைகளுக்கு ரூ.1 லட்சம் அபராதம்…

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் உத்தரவிற்கு இணங்க, மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் விஜயகுமார் வழிகாட்டல் படி ராமேஸ்வரம் நகரில் அரசு தடை செய்த புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்கும் விதமாக உணவு பாதுகாப்பு அலுவலர் லிங்கவேல், சார்பு ஆய்வாளர் மணிகண்டன், சிறப்பு சார்பு ஆய்வாளர் கதிர்வேல், காவலர்கள் சரவணன், முனியசாமி பாண்டி, விநாயகம், கோபி, திக்விஜயன் உள்ளிட்டோர் ராமேஸ்வரம் நகர் முழுவதும் 38 கடைகளில் இன்று கூட்டாக ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் 3 கடைகளில் ரூ.10 ஆயிரம் மதிப்பில் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து 2 கடைகளுக்கு ( முதல் முறை குற்றம்) தலா ரூ. 25,000, ஒரு கடைக்கு ( 2 ம் முறை குற்றம்) ரூ 50,000 என ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மூன்று கடைகளின் உணவு பாதுகாப்பு உரிமம் தற்காலிகமாக ரத்து , விற்பனை நிறுத்தம் செய்யப்பட்டது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!