மதுரை மாநகர காவல்துறை சார்பாக, காஷ்மீரில் வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு நிதி உதவி..

கடந்த 14.02.2019 அன்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலில் நாட்டிற்காக வீர மரணம் அடைந்த அரியலூர் மாவட்டம் கார்குடி கிராமத்தை சேர்ந்த திரு.சின்னையன் என்பவரது மகன் திரு.சிவச்சந்திரன் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் சவலப்பேரியை சேர்ந்த திரு.கணபதி தேவர் என்பவரது மகன் திரு.சுப்பிரமணியன் ஆகியோர் குடும்பத்தினருக்கு மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம்,IPS முயற்சியால் மதுரை மாநகர காவல்துறையில் உள்ள காவல் ஆளிநர்கள் முதல் காவல் அதிகாரிகள் வரை அளித்துள்ள நிதியுதவி தொகையான ரூபாய்.6,35,000/- இன்று மதுரை மாநகர நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் திரு.மகேஷ்குமார் மூலமாக திரு.சுப்பிரமணியன் குடும்பத்தினருக்கு ரூபாய்.3,17,500/- மற்றும் E3-அண்ணாநகர் ச&ஒ காவல் ஆய்வாளர், திரு.காட்வின் ஜெகதீஸ்குமார் மூலமாக  திரு.சிவச்சந்திரன் குடும்பத்தினருக்கு ரூபாய்.3,17,500/- வழங்கப்பட்டு, மதுரை மாநகர காவல்துறையினர் சார்பாக ஆறுதல் வழங்கப்பட்டது.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!