ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹாவில் உலக பிரசித்தி பெற்ற மஹான் குத்புல் அக்தாப் சுல்தான் செய்யது இப்ராஹிம் ஷஹீத் ஒலியுல்லாஹ் தர்ஹாவில் வருடம் தோறும் மத நல்லிணக்கத்திற்கான சந்தனக்கூடு எனும் மத நல்லிணக்க விழா பெரும் விமர்சியாக நடைபெறுவது வழக்கம்.அதனைத் தொடர்ந்து இந்த வருடத்தின் 851ம் ஆண்டின் சந்தனக்கூடு எனும் மத நல்லிணக்க விழாவில் முதல் நிகழ்ச்சியாக ஏப் 29-ல் தொடங்குகிறது.
திருவிழாவை காண வெளி மாநிலங்களில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் யாத்திரைகள் வருகை புரிவதால் முன்னேற்பாடாக வருகின்ற யாத்திரிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் சம்பந்தமாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெய ஆனந்த் தலைமையில் தர்கா கமிட்டி நிர்வாகிகள் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் கடந்த ஆண்டு குத்தகைக்காரர்கள் வாகனம் வசூல் செய்வதிலும் கடைக்காரர்களிடம் வசூல் செய்வதிலும் முறைகேடுகள் செய்ததாகவும் அடாவடித்தனமாக வசூல் செய்ததாகவும் தொடர்ச்சியாக புகார்கள் எழுந்தது. இதனை சரி செய்யும் வகையிலும் பொது மக்களுக்கும் கடைக்காரர்களுக்கும் எவ்வித இடையூறு இல்லாத வகையிலும் இந்த ஆண்டு ஊராட்சி நிர்வாகம் நேரடியாக பணியாளர்களை வைத்து குறைந்த விலை நிர்ணயம் செய்து வாகனம் வசூல் மற்றும் கடை வசூல் செய்ய வேண்டும் என்று தர்கா நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதனால் வியாபாரிகளுக்கும் வாகன ஓட்டுபவர்களுக்கும் எவ்வித இடையூறும் இருக்காது என்றும் குறைவான விலையில் நிர்ணயம் செய்தால் வியாபாரிகள் நியாயமான விலையில் விற்பனை செய்வார்கள் என்று தெரிவித்தனர். இந்த ஆலோசனைகளை ஏற்று வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெய் ஆனந்த் ஊராட்சி நிர்வாகம் நேரடியாக செயலாளர் தலைமையில் வசூல் செய்யப்படும் என்று தெரிவித்தார். அதைத் தொடர்ந்து யாத்திரைகளுக்கு தேவைப்படக்கூடிய கழிப்பிடம் குடிதண்ணீர் மருத்துவம் முறையான சாலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். அனைத்து ஆலோசனைகளை ஏற்று இந்த ஆண்டு சிறந்த முறையில் திருவிழா நடைபெறும் அதற்கு நீங்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்தார்
.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









