கீழக்கரை இஸ்லாமியா பெண்கள் அரபிக் கல்லூரி “பசியாற்றுவோம் திட்டம்” இரண்டாம் ஆண்டு துவக்க விழா…

கீழக்கரை இஸ்லாமியா பெண்கள் அரபிக் கல்லூரி “பசியாற்றுவோம் திட்டம்” முதலாமாண்டு நிறைவு மற்றும்  இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு  ஃபாத்தி சபரிமாலா  நாளை (11/08/2024) கீழக்கரை வருகை தர உள்ளார்.

இது தொடர்ந்து இரவு 6:30மணிக்கு இஸ்லாமியா ஸ்கூல் வளாகத்தில் பசியாற்றுவோம் திட்டம் பற்றி விளக்கும் வகையில் நாடகம் மற்றும் பட்டிமன்றம் 9மணி வரை நடைபெற உள்ளது.

இத்திட்டத்தை கீழக்கரை மற்றும் பல இடங்களில் “பசியாற்றுவோம் திட்டத்தை* முன்னின்று நடத்தும் சுலைஹா கூறுகையில், ஒரு தனி மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என தமிழ் கவி பாரதி கூறியது அவர் பசியின் கொடுமையை அனுபவித்ததின் வெளிப்பாடே, அதே போல் இஸ்லாமிய மார்க்கத்தில் இறைதூதரால் பகிர்ந்து உண்ணுங்கள் என்பது பல இடங்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதை நடைமுறைபடுத்தும் வகையில் கீழக்கரையில் கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக வாரந்தோறும் 100 குடும்பங்களுக்கு மேலாக உணவு வழங்கப்பட்டு வருகிறது.  ஆனால் இத்திட்டத்தை பல இடங்களுக்கு விரிவுபடுத்தி பசியில்லா குடும்பங்களை உருவாக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அதற்கு அனைவருடைய ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறோம்” என்றார் முழு நம்பிக்கையுடன்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!