இராமேஸ்வரத்தில் தந்தை பெரியாரின் நினைவு நாளை முன்னிட்டு பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் தெருமுனை கூட்டம்
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் தந்தை பெரியாரின் 51 ஆவது நினைவு நாள் மற்றும் அண்ணல் அம்பேத்கரின் 68 வது நினைவு நாளை முன்னிட்டு பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
இதில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட அமைப்பாளர் தோழர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார் . ஆதித்தமிழர் கட்சியின் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் பாஸ்கரன் வரவேற்புரை வழங்கினார்..
திராவிட இயக்க பேச்சாளர் வே.மதிமாறன் மற்றும் பெரியார் பேரவையின் தலைவர் தோழர் நாகேசுவரன் மற்றும் இனங்களின் இறையாண்மைக்கான இளைஞர் மாணவர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் தோழர் பாவெல் ஆகியோர் சிறப்புரையாற்றினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர் தலைவர் முத்து வாப்பா, சமூக செயற்பாட்டாளர் தோழர் தமிழ்வாணன், வீரகுல தமிழர் படையின் ஒருங்கிணைப்பாளர் கீழை பிரபாகரன், இனங்களின் இறையாண்மைக்கான இளைஞர் மாணவர் இயக்க தோழர் பூர்னிமா சிறுபான்மை நலக்குழுவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் வேணுகோபால், திராவிடர் விடுதலைக் கழகத்தின் தோழர் பெரியார் முத்து, இனங்களின் இறையாண்மைக்கான இளைஞர் மாணவர் கூட்டமைப்பின் தோழர் செங்கொடி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் தோழர் வேந்தை சிவா, மக்கள் அதிகாரம் தோழர் ரவி ஆகியோர் சிறிய அளவில் உரையாற்றினர்.
இந்தக் கூட்டத்தில் தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் நகர் செயலாளர் முகமது இப்ராஹிம், மனிதநேய மக்கள் கட்சியின் நகர்த்தலைவர் செய்து இப்ராம்ஷா, திமுக மாணவர் தொண்டர் அணி பொறுப்பாளர் பெருமாள் எம் எம் கருப்பையா மற்றும் ஞானசேகரன், ஆகியோர் கலந்து கொண்டனர்.
இறுதியாக தமிழ் புலிகள் கட்சியின் நகர தலைவர் காளிதாஸ் நன்றியுரை ஆற்றினார்.
You must be logged in to post a comment.