நீட் தேர்வு.. கண்ணீர் கதையாகிய சோகம்..

எர்ணாகுளத்தில் நீட் தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்த கிருஷ்ணசாமியின் மகன் கஸ்தூரி மகாலிங்கம் அப்பா எங்கே? என தேடியது பார்ப்போர் மனதை பதற வைத்தது. திருத்துறைப்பூண்டியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி என்பவர் அரசு ஊழியராக பணி புரிகிறார். இவரது மகன் 12-ஆம் வகுப்பு முடித்துவிட்டு மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தார்.

தமிழகத்தில் தேர்வு மையம் கேட்ட கஸ்தூரி மகாலிங்கத்துக்கு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் போடப்பட்டிருந்தது. இதையடுத்து தனது தந்தை கிருஷ்ணசாமியுடன் பெரும் அவதிக்குள்ளாகி ஒரு வழியாக எர்ணாகுளம் வந்தடைந்தார் மகாலிங்கம்.

இதையடுத்து ஒரு விடுதியில் தங்கியிருந்த அவர்கள் தனது மகனுக்கு நீட் தேர்வு விதிகளுக்கு பொருந்தும் வகையில் ஆடை எடுக்கவும் வெளியே சென்றிருந்தது தெரியவந்தது. இந்நிலையில் இன்று காலை 7.30 மணிக்கு எர்ணாகுளத்தில் உள்ள நாலந்தா பப்ளிக் பள்ளியில் மகனை விட்டுவிட்டு விடுதியில் ஓய்வு எடுக்க சென்ற கிருஷ்ணசாமிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மரணமடைந்துவிட்டார்.

இதையடுத்து மதியம் 1 மணிக்கு தேர்வு முடிந்து வெளியே வந்த கஸ்தூரி மகாலிங்கம் , அப்பா எங்கே என கேட்டபோது அங்கிருந்த பொதுமக்கள் கண்ணீர் விட்டனர். இதையடுத்து போலீஸார் அந்த மாணவனை கிருஷ்ணசாமியின் உடல் வைக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு ஜீப்பில் அழைத்து சென்றனர்.

இந்த நீட் தேர்வினால் ஏற்பட்ட சோகத்தை கண்டித்து SDPI, SIO மற்றும் பல அரசியல் அமைப்புகளும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!