58 கிராம பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில் டிசம்பர் 1 ஆம் தேதி மாபெரும் உண்ணாவிரத போராட்டம்..

உசிலம்பட்டி 58 கால்வாயில் வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்க கோரி 58 கிராம பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில் டிசம்பர் 1 ஆம் தேதி மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடத்திட அறிவிப்பு செய்தனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியின் கனவு திட்டமாகவும், உசிலம்பட்டி மக்களின் குடிநீர் ஆதராமாகவும் விளங்கும் 58 கிராம கால்வாய் திட்டத்தில் தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.,

இந்நிலையில் 58 கால்வாயில் தண்ணீர் திறக்க வலியுறுத்தியும், வைகை அணை 71 அடி கொள்ளளவு கொண்டது.,

இதில் 67 அடியை எட்டியதும் உசிலம்பட்டி 58 கிராம கால்வாய்க்கு தண்ணீர் திறக்க கோரியும், தண்ணீர் திறக்க அரசு கால தாமதப்படுத்தி வருவது தொடர்பாகவும், விரைவில் தண்ணீர் திறக்க அரசுக்கு கோரிக்கை விடுக்கும் வண்ணமும், காலதாமதப்படுத்துவதற்கு கண்டனத்தை தெரிவிக்கும் விதமாக போராட்டங்களை நடத்துவது தொடர்பாக

இன்று உசிலம்பட்டி சந்தைப்பகுதியில் உள்ள தேவர் மண்டபத்தில் அரசியல் கட்சி நிர்வாகிகள் மற்றும் அனைத்து விவசாய சங்கங்கள் இணைந்து ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் கால தாமதப்படுத்தி வரும் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் முதற்கட்டமாக வரும் டிசம்பர் 1ஆம் தேதி ஆயிரக்கணக்கான விவசாயிகளையும், பொதுமக்களையும் திரட்டி மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தை நடத்துவது என்றும், அடுத்தடுத்து வர்த்தக சங்கங்களுடன் இணைந்து முழு கடையடைப்பு மற்றும் சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுக்க இந்த ஆலோசனை கூட்டத்தில் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!