பாரத் பெட்ரோலியத்தின் கோவை-பெங்களூரு எண்ணெய்க்குழாய்த் திட்டத்தை -IDPL எதிர்த்து சென்னிமலை ஒன்றியம் பசுவபட்டி அத்திக்காட்டில் 13.03.19 இன்று முதல் போராட்டத்தை உழவர் பெருமக்கள் தொடங்கியுள்ளனர்.
நிலத்தைக் காப்பது என்ற உறுதிமொழி எடுத்ததோடு ‘நடுகல்’ ஒன்றையும் நட்டுவைத்து இது எங்கள் தாய்மண் இதற்குள் அந்நியர்கள் நுழையக் கூடாது எனப் பிரகடனம் செய்துள்ளனர். விவசாய விளை நிலங்களை அழிக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் பாரத் பெட்ரோலியத்தின் செயல்பாடுகளை கண்டித்து தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்





You must be logged in to post a comment.