கர்நாடக நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை மேட்டூருக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது இதனை கருத்தில் கொண்டு ஜூன் 25-ல் குருவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர் .பாண்டியன் தெரிவித்தார்.
திருத்துறைப்பூண்டியில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் மேலும் தெரிவித்தாவது, கர்நாடகா, கேரளாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது . கர்நாடாகவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் அனைத்து அணைகளும் நிரம்பி வழியும் நிலை ஏற்பட்டுள்ளது கபினி அணையிலிருந்து முதல் கட்டமா 35 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது நாளை முதல் கிருஷ்ணசாகர் அணையிலிருந்தும் நீர் திறந்து விடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதே நிலை தொடர்ந்தால் மேட்டூர் அணை நிரம்பி ஜுன் 25ந்தேதி குருவை சாகுபடிக்கு நீர் திறந்து விட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேட்டூர் அணை திறக்கப்பட்டால் கடைமடைக்கும் பாசன பகுதி அழைக்கும் தண்ணீர் கிடைக்குமா என்ற ஏக்கத்திற்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர் காரணம் எந்த ஒரு ஆறும் தூர் வாரப்பட வில்லை. பராமரிப்பு தலைப்பின் கீழ் ஒதுக்கப்படும் நிதியை கொண்டு மேற்கொள்ளப்படும் பாசன மதகுகள், கட்டமைப்புகள் பராமரிப்பு பணிகள் இதுவரை துவக்கப்படவில்லை.
கடந்த ஆண்டு நீர் வள நிலவள திட்டத்தின் கீழ் ஏரிகள் மேம்படுத்தும் பணிக்கு டெண்டர் விடப்பட்டும் பணிகள் துவங்கப்படவில்லை.
குடி மராமத்து பணி திட்டத்தின் கீழ் தற்போது தான் டெண்டர் விடும் பணி துவங்கியுள்ளது தூர் வாரும் பணி துவங்கவில்லை இதனால் ஒதுக்கப்பட்ட நிதிகள் முழுமையும் ஊழல் முறைகேடுகள் நடைபெற வழி வகுக்குமே தவிர பணிகள் நடைபெற போவதில்லை இது குறித்து பொதுப்பணித் துறை பொறுப்பு வகிக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உண்மை நிலையை தெளிவுபடுத்த வேண்டும் – உடன டியாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் கொண்ட குழுக்கள் அமைத்து ஆய்வு செய்து ஊழல் முறைகேடு இன்றி பணிகள் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். கோரையாறு மற்றும் விளை நில பகுதிகளில் மணல் கொள்ளை இரவு பகலாக நடந்து வருகிறது விளை நிலப்பகுதிகளில் மணல் குவாரி என்ற பெயரில் மணல் கொள்ளையடிக்கப்பகிறது இதனால் மழை வெள்ளக் காலங்களில் பேரிடர் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் .
மாவட்ட கெளரவ தலைவர் செல்வராஜ் , துணைச் செயலாளர் அக்கிரி அருள் , கோட்டூர் ஒன்றிய செயலாளர் தெய்வமணி, திருத்துறைப்பூண்டி ஒன்றிய செயலாளர் பாலமுருகன் உடனிருந்தனர் .

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print











