உசிலம்பட்டி அருகே பப்பாளி பழத்தை பறிக்காமல் மரத்திலேயே விடும் அவலம்… விவசாயிகள் பெரும் வேதனை…

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது நாவார்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் விவசாயிகள் கோடை காலத்தில் அதிக விலைக்கு விற்கும் என்ற நோக்கில் பப்பாளியை பயிரிட்டுள்னர். பின்பு அதற்கு வாரம் ஒருமுறை தனது கிணற்று தண்ணீரை பாய்ச்சி பாதுகாப்பதோடு, மருந்து தெளிப்பது, களை எடுப்பது, உரம் வைப்பது போன்ற பணிகளை விவசாயிகள் ஆர்வத்துடன் செய்து வந்தனர்.

இந்நிலையில் பப்பாளி பழம் பறித்து விற்பனை செய்யும் பட்சத்தில் கிலோ 1 ரூபாய்க்கு கூட வாங்க ஆளில்லை. பப்பாளி பழத்திற்கு போதிய விலையில்லாததால் பழத்தை பறிக்காமல் மரத்திலேயே விடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். விவசாயிகள் கூறுகையில் “இந்த வருடம் கோடை கால வெயில் சுட்டெரிக்கும் நிலையில் வெயிலின் தாக்கத்தை குறைப்பதற்கு பப்பாளி அதிகம் தேவைப்படும் பட்சத்தில் இந்த பப்பாளி பழத்திற்கே போதிய விலையில்லாதது வேதனை தருவதாக உள்ளது” என விவசாயிகள் கூறுகின்றனர்.

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!