ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு லட்சத்து எழுபத்தி ஐயாயிரம் ஹெக்டேர் அளவிற்கு நெல் விவசாயம் சாகுபடி செய்யப்பட்டு இருந்த நிலையில், பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக 60 முதல் 70 விழுக்காடு விவசாயம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் விவசாயிகள் தரப்பில் தொடர் கோரிக்கைகள் இருந்து வருகின்றன.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பயிர்களை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலுவான கோரிக்கை இருந்து வரும் நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா சாம்பல் குளத்தை அடுத்த “கேளல்” கிராமத்தில் நெற்பயிர்கள் கருகிபோய் விவசாய முற்றிலும் பாதிக்கப்பட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனால் ஏக்கருக்கு 45 ஆயிரம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் கூறி பாதிக்கப்பட்ட விவசாயிகள் கரிய பயிர்களோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து புகார் அளிக்க முயன்றனர் அப்போது பயிரோடு ஆட்சியரை சந்திக்க சென்ற விவசாயிகளை போலீசார் நுழைவு வாயிலிலேயே தடுத்து நிறுத்தி பயிர்களோடு புகார் அளிக்க செல்ல அனுமதி இல்லை எனக் கூறி அனுமதி மறுத்தனர்.
வாடிய பயிர்களோடு புகார் அளித்தால் தானே எங்கள் வருத்தம் ஆட்சியருக்கு தெரியும் எனவும் கூறினர்.
.
You must be logged in to post a comment.