மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டாச்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் தலைமையிடத்து துணை வட்டாச்சியர் ராஜ்குமார், துணை வட்டாச்சியர்கள் தாணு மூர்த்தி, மகேந்திர பாபு தலைமையில் நடைபெற்றது.,இந்த கூட்டத்தில் உசிலம்பட்டி 58 கால்வாய் சங்க விவசாயிகள், மதுரை மாவட்ட நன்செய் புன்செய் விவசாய சங்க விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு சங்க விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர்.,ஊரணி, ஓடைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற புகார்களுக்காகவும், மனுக்களுக்காகவும் காத்திருக்காமல், சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களே நடவடிக்கை எடுத்து மீட்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை விடுத்தனர்.

You must be logged in to post a comment.