திருவாடானை அருகே வயல்காட்டில் உழுதபோது டிராக்டர் கவிழ்நது விவசாயி மரணம்…

திருவாடானை அருகே விவசாயம் செய்வதற்காக நிலத்தை டிராக்டர் வைத்து உழுதபோது டிராக்டர் கவிழ்த விபத்தில் விவசாயி மரணமடைந்தார். திருவாடானை காவல் நிலையத்தார் விசாரித்துவருகிறார்.

இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, திருவாடானை அருகே நெய்வயல் கிராமத்தில் உள்ள வயலில் விவசாயி நாகப்பட்டிணம் மாவட்டம், கீழையூரைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் அரவிந்த் (26) என்பவர் உழுதுகொண்டிருந்தார். வயல்காடு நீரும் சகதியுமாக இருந்தால் டிராக்ரின் இரண்டு சக்கரங்களும் இரும்பு கம்பிகளால் ஆன சக்கரம் மாட்டியிருந்த நிலையில் சகதியில் சிக்கி டிராக்டர் தலைகுப்பிர கவிலழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் கவிழ்ந்த டிராக்டருக்குள் சிக்கிய விவசாயி சம்ப இடத்திலேயே மரணமடைந்தார். இது குறித்து திருவாடானை காவல் நிலைய காவல் ஆய்வாளர் புவனேஸ்வரி வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.

கே.எம்.வாரியார்:- செய்தியாளர் வேலூர்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!