உசிலம்பட்டி அருகே வடுகபட்டியில் கத்திரிக்காய்க்கு உரிய விலை கிடைக்காததால் கால்நடைகளை விட்டு மேய்க்க விடும் விவசாயி…

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வடுகப்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் கத்தரிக்காய் விவசாயம் செய்துள்ளனர்.தற்போது தக்காளி வெங்காயம் உள்பட காய்கறிகளின் விலை ஏற்றம் கண்டுள்ள நிலையில் கத்தரிக்காயும் நல்ல விலை போகும் என விவசாயிகள் எதிர்பார்த்தனர்.

இந்நிலையில் கத்திரிக்காய் பயிரிட்டு நன்கு விளைச்சல் கண்ட நிலையில் அதனை பறித்து உசிலம்பட்டி காய்கறி சந்தையில் விற்பனைக்கு சென்ற போது வியாபாரிகள் கத்தரிக்காய் கிலோ நான்கு ரூபாய் முதல் ஐந்து ரூபாய்க்கு மட்டுமே விற்பனைக்கு எடுத்துள்ளனர்.கடந்த வாரம் வரை கிலோ ரூ30முதல் ரூ40வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் வரத்து அதிகமானதால் விலை குறைந்துள்ளது.இந்த விலை வண்டி வாடகைக்கு கூட பத்தாது என்பதால் மன உளைச்சல் ஆன விவசாயி தான் வளர்க்கும் கால்நடைகளை விட்டு கத்திரிக்காய் செடிகளை மேய்த்து வருகிறார். விவசாயம் செய்வதால் எந்த ஒரு லாபமும் இல்லாமல் பெரும் சிரமப்பட்டு வருவதாகவும் விவசாயிகளின் அவலநிலையை விவசாயி விருமாண்டி கிராமத்து பாணியில் தத்துவ பாடல் பாடி தனது வேதனையை வெளிப்படுத்தி உள்ளார்.

மேலும் இது குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!