வஃக்ப்-திருடர்களும்..! திருத்தங்களும்..!
(ஒரு சிறிய தொடர்)
வஃக்ப் புரிதல்-5
முஸ்லிம்கள் தங்களின் பின்னடைவுகளை, இன்றைய வஃக்ப்பின் நிலைகளை, ஆக்ரமிப்புகளை, முஸ்லிம் சமூகம் இழந்த வஃக்ப்பின் பயன்களை அறிந்து கொள்ள கொஞ்சம் கடந்த கால வரலாறுகளையும் அறிந்து கொள்ள வேண்டும்.
அன்றைய காங்கிரசிலிருந்த பாசிசவாதிகளின் அழுத்தத்தால், முஸ்லிம்களின் நலன்களை பாதுகாக்க முஸ்லிம் லீக் உருவானது.
அன்றைய பரந்த இந்திய நிலப்பரப்பில், இந்திய முஸ்லிம்கள் கல்வியிலும், பொருளாதாரத்திலும் சிறந்து விளங்கினாலும்,
ஆங்கிலேயர்களின் சூழ்ச்சிகளும், பாசிசவாதிகள் உருவாக்கிய இந்து முஸ்லிம் பிரிவினைகளும் இறுதியில் இந்தியா பிளவுபட்டு போக காரணமாக அமைந்தன.
இந்தியா பிளவுபட்டு பாகிஸ்தான் உருவானபோது வட இந்தியா மற்றும் வடமேற்கு இந்தியாவில் இருந்த ஏராளமான முஸ்லிம் ஆளுமைகள், கல்வியாளர்கள், செல்வந்தர்கள், பாகிஸ்தானுக்கு குடி பெயர்ந்து சென்று விட்டனர்.
தென்னிந்திய பகுதிகளில் அதிகமான முஸ்லிம்கள் இந்தியாவிலேயே தங்கினர்.
இந்த பிரிவினையில் படித்த, பொருளாதாரத்தில் முன்னேறியிருந்த முஸ்லிம்கள் பாகிஸ்தான் சென்றுவிட,
இந்திய முஸ்லிம்களுக்கு பெரும் பின்னடைவுகள் ஏற்பட்டன.
அன்றைய காங்கிரசிலிருந்த பாசிசவாதிகள் தங்கள் பெரும்பான்மையை நிரூபித்துக் கொள்ள இந்து -முஸ்லிம் கலவரங்களை ஏற்படுத்தினர்.
இது போன்று ஏற்படுத்தப்பட்ட கலவரங்களில் முஸ்லிம்களுக்கு ஏராளமான பொருள் இழப்புகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டன. முஸ்லிம்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன ஆக்கரமிக்கப்பட்டன.
அப்போது பாகிஸ்தானுக்கு சென்ற ஏராளமான செல்வந்த முஸ்லிம்கள் தங்கள் சொத்துக்களை குறைந்த விலையில் விற்றுவிட்டும்,
முடியாதபோது அப்படியே விட்டுவிட்டும் சென்றுவிட்டனர்.
விபரம் தெரிந்த பலர் சொத்துக்களை சில அமைப்புகளுக்கு வஃக்ப் செய்துவிட்டும் சென்று விட்டனர்.
இவைகள் எல்லாம் அவசரகதியில் சரியாக முறையாக ஆவணப் படுத்தப்படாததால், அரசாங்கமும், பல தனிநபர்களும், அமைப்புகளும், கையகப்படுத்திக் கொண்டன.
இவைகளுக்கு சரியான முறையான வஃக்ப் செய்யப்பட்ட ஆவணங்கள் இருக்காது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இப்போது இந்த வரலாற்றின் மூலம் வஃக்ப் நிலங்களில் சரியாக ஆவணம் இல்லையெனில் அதனை மாவட்ட ஆட்சியர் அதிகாரம் மூலம் அரசாங்கத்திற்கோ, அல்லது அவர்கள் நினைக்கும் ஒருவருக்கோ, அமைப்பிற்கோ, உரிமையாக்கிவிட முடியும் என்பதை புரிந்து கொள்ளலாம்.
வஃக்ப்பின் பல பரிமாணங்களை தொடர்ந்து பேசுவோம்..!
கவிஞர், கப்ளிசேட்!