வஃக்ப்-திருடர்களும்..!திருத்தங்களும்..!

வஃக்ப்-திருடர்களும்..! திருத்தங்களும்..!

(ஒரு சிறிய தொடர்)

வஃக்ப் புரிதல் -22

ஒரு ஜனநாயக நாட்டில் இயற்றப்படுகிற சட்டங்கள் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதாக இருக்கவேண்டும்.

ஒரே நாடு,ஒரே தேர்தல்,ஒரே ரேசன் போன்ற ஒரே என்று கட்டமைக்கப்படுகிற எந்தக் கருத்திலும் சர்வாதிகாரத்தை நோக்கி நகர்ந்து விடும்.

இந்தியா போன்ற பல மதங்கள்,பல மொழிகள்,பல இனங்கள்,பல கலாச்சாரங்கள் உள்ள நாட்டில் வேற்றுமையில் ஒற்றுமை (Unity in diversity) என்னும் கருத்தியலே ஆட்சியாளர்களால் முன்னெடுக்க படவேண்டும்.

மாறாக இயற்றப்படுகிற சட்டங்களை ஒரு மதத்தினரை இழிவுபடுத்துவதாக அவர்களின் உயிர்,உடமை,மானம் ஆகியவற்றிற்கு பாதிப்பு ஏற்படுத்துவதாக ஒருபோதும் அமையக்கூடாது.

இதுபோன்ற ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் உரிமைபறிப்புகள் இறுதியில் அந்த‌ மதத்தினரை ஒடுக்குவதாக அமைந்துவிடும்.

இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள பேச்சுரிமை, எழுத்துரிமை,மத வழிபாட்டு உரிமை போன்ற அடிப்படை உரிமைகளை ஒருபோதும் பறிக்கக் கூடாது.

முஸ்லிம்களின் நலனுக்காக கொடையளிக்கப்பட்டமுஸ்லிம்களின் சொந்த சொத்துக்களை, சரியான முறையில் பயன்படுத்த வழிகாட்ட சட்டங்கள் தேவையே தவிர,

அவர்களின் சொத்துக்களை அபகரிக்க வழி ஏற்படுத்தும் சட்டங்கள் மிகப் பெரிய சமூக ஆபத்தை உருவாக்கும்.

ஒன்றிய அரசாங்கம் வஃக்ப் திருத்த சட்டத்தை ஏழை எளிய முஸ்லிம்களுக்கு பயனளிக்கும் என்று தங்க முலாம் பூசி தெரிவித்தாலும்,

ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகமும் இந்த சட்டத்தை ஏன் எதிர்க்கிறது என்பதை பொது சமூகத்திற்கு புரிய வைத்தாலே,

இந்த சட்டத்தின் பின்னுள்ள முஸ்லிம்களுக்கு எதிரான நிலையை புரிந்து கொள்ள முடியும்.

மஹாராஷ்டிரா மாநிலத்தின் வஃக்ப் வாரியத்தின் ஓய்வு பெற்ற தலைமை நிர்வாக அதிகாரி சேக் அப்துல்லா ரவூப் அவர்கள்,

ஊடகவிய லாளர்களுக்கு பவர்பாயிண்ட் (Power point presentation) விளக்கத்தின் மூலம், புதிய வஃக்ப் சட்ட திருத்த மசோதாவில் ஐந்து முக்கியமான உட்பிரிவுகளில், அதன் ஆபத்துகள் மறைக்கப் பட்டுள்ளதாக விளக்கமளித்தார்.

மேலும்,இந்த புதிய திருத்தத்தின் படி, மத்திய வஃக்ப் கவுன்சிலில் , அதிகப்படியான முஸ்லிம் அல்லாதவர்கள் இடம்பெற வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்தார்.

இதுபோன்ற மிக இக்கட்டான சூழலில், தொலைக்காட்சி பேட்டிகள், மற்றும் சமூக ஊடகங்களில் உரையாடல்களில் மிகத்தெளிவான விளக்கங்களை பொது சமூகத்திற்கு புரிய வைக்க வேண்டும்.

வஃக்ப் சொத்துக்களை தவறாக பயன் படுத்துபவர்களை கண்டறிந்து அவர்களிடமிருந்து சொத்துக்களை மீட்பதோடு,

அவர்கள் இவ்வளவு நாட்கள் தவறாக பயன் படுத்தியதற்கான இழப்பீடுகளையும் பெற வேண்டும்.

வஃக்ப் வாரியத்தில் ஊழல் செய்தவர்களை, ஊழலுக்கு துணை போனவர்களை, தண்டிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யவேண்டும்.

வஃக்ப்பின் பல பரிமாணங்களை தொடர்ந்து பேசுவோம்…!

கவிஞர்,கப்ளிசேட்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!