(ஒரு சிறிய தொடர்)
வஃக்ப் புரிதல் -2
வஃக்ப் -திருடர்களும்..!
திருத்தங்களும்..!
(ஒரு சிறிய தொடர்)
வஃக்ப் புரிதல் -2
பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்கள் காலத்திலேயே பொது சமூகத்திற்கான
அர்ப்பணங்கள் (வஃக்ப்) ஆரம்பமாகிவிட்டது.
உமர்(ரலி) அவர்களுக்கு கைபர் போரில் கிடைத்த ஒரு விலையுயர்ந்த
நிலத்தை பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்களின் ஆலோசனைப்படி, மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கியதே முதல் வஃக்ப் என்று குறிப்பிடப்படுகிறது.
வஃக்ப் சமூகத்திற்கான கட்டாய விதியல்ல என்றாலும், மனிதனுக்குள் இது கருணையை விதைக்கிறது.
மறு உலக வாழ்க்கையின் சிந்தனைகளை இந்த வஃக்ப்புகள் ஏற்படுத்துகிறது.
ஒவ்வொருவரும் தனக்கான நன்மைகள் தனது சவக்குழியிலும்,
மறு உலகிலும், நிரந்தரமாக தொடர வேண்டும் என்றே இதுபோன்ற நிரந்தரமாக தொடரும் நன்மையான வஃக்பை செய்கிறார்கள்.
வஃக்ப் அது உலகியல் ரீதியாக
பொருளாதாரப்
பயன்களை அளித்தாலும்,அது ஆன்மீக ரீதியாக மனிதனை கருணையோடு வாழச் செய்கிறது.
பிறரின் சொத்துக்களை அபகரித்து வாழும் மனித சமூகத்தில், தனது சொத்தை நன்மைகளுக்கு அர்ப்பணிப்பு செய்தல் என்பது மனிதனின் பண்பட்ட நிலையாகும்.
வஃக்ப் சொத்துக்கள் இந்தியாவில், இந்திய ராணுவம்,
இந்திய ரயில்வேக்கு அடுத்த மூன்றாவது நிலையில் அதன் மதிப்பீடுகள் இருக்கிறது எனில் அதன் பொருளாதார பலத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
இது பல நல்ல மனிதர்களின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.
இந்தியாவில் வஃக்ப் சொத்துக்கள் இவ்வளவு திரட்சியாக இருக்கும் போது, உலக அளவில் வஃக்ப் சொத்துக்களை கணக்கிட்டால் உலகின் பொருளாதாரத்தை ஏறக்குறைய கட்டுப்படுத்தும் அளவிற்கு முஸ்லிம்களுக்கு பொருளாதார திறன் இருக்கிறது.
அந்த சொத்துக்களை,
அதன் பயன்களை, முழுமையாக முஸ்லிம் சமூகம் பயன்படுத்தியதா?
1300 ஆண்டுகளுக்கு மேலாக உலகின் ஏறக்குறைய பாதி நிலப்பரப்பை ஆட்சி செலுத்திய முஸ்லிம் ஆட்சியாளர்கள் இந்த வஃக்ப்புகளை எந்த அளவிற்கு சமூகத்திற்கு பயன்படுத்தினார்கள்?
என்பதெல்லாம் மில்லியன் டாலர் கேள்வி?
இறைவனின் சட்டமான ஜகாத் என்ற இஸ்லாமிய பொருளியல் திட்டம்
ஏழைகளுக்கு எப்படி சிறப்பாக அமைந்து,
ஏழ்மையை இல்லாமல் ஆக்கும் ஒரு சிறப்பு திட்டமோ,
அதுபோலவே, வஃக்ப்பின்
சொத்துக்களை,
மஸ்ஜித்களாக,
மதரசாக்களாக,
கல்வி நிலையங்களாக,
மருத்துவ மனைகளாக, உருவாக்கி இந்த சமூகத்திற்கு பயன் அளிக்கவே மக்கள் வஃக்ப் செய்தார்கள்.
வஃக்பை மூன்று வகையாக பிரிக்கலாம்.
1.பொதுவஃக்ப்
2.பாதி பொது வஃக்ப்
3.தனி வஃக்ப்
என்று வகைப்படுத்தலாம்.
பொது வஃக்ப்பாக
பாலம்,கிணறு,
சாலைகள் ஆகியவைகள் குறிப்பிடலாம்.
பாதி பொதுவஃக்ப் என்பது வஃக்பின் பாதி பயன்கள் பொதுவானதாகவும்,
மீதிப்பாதி பயன்பாடுகள் குடும்பத்தினருக்கோ
அல்லது அந்த சொத்தை பராமரிப்பவருக்கோ கிடைக்கும் வகையில் செய்வதும் உண்டு.
தனி வஃக்ப் என்பது ஒரு சொத்தின் பயன்களை உறவினருக்கு
(மனைவி,கணவன்,தாய்,தந்தை, குழந்தைகள்) தந்துவிட்டு, அவர்களின் மரணத்திற்கு பிறகு அதனை பொதுப் பயன்பாட்டிற்கு எடுத்துக் கொள்வதாகும்.
இந்தவகை தனிவஃக்புகளை மேற்கத்திய நாடுகளில், வஃக்பாக ஏற்பதில்லை.
இந்த நிலைகளில் எங்கு தவறு ஏற்படுகிறது?
எப்படி விதிகள் மீறப்படுகிறது?
வஃக்பின் பல பரிமாணங்களை தொடர்ந்து பேசுவோம்..!
கவிஞர், கப்ளிசேட்!
You must be logged in to post a comment.