வஃக்ப்-திருடர்களும்..!
திருத்தங்களும்..!
(ஒரு சிறிய தொடர்)
வஃக்ப் புரிதல் -13
பழைய காலங்களில்
பொதுவாக வஃக்ப் அதிகமாக செய்யப்பட்டதால் பழைய பள்ளிவாசல்கள்
மற்றும் மதரசாக்களுக்கு ஏராளமான சொத்துக்கள் கொடையாக கிடைத்தன.
சமீபகாலங்களில் கட்டப்படும் பள்ளிவாசல்கள் மற்றும் மதரசாக்களுக்கு எந்த புதிய வஃக்ப்களும் கிடைப்பதில்லை.
புதிய பள்ளிவாசல்
மற்றும் மதரசாக்களை கட்டவே பலரின் உதவியை நாடி வசூல் செய்து கட்டி விடுகிறார்கள்.
ஆனால் அவைகளுக்கான நிரந்தர வருமானம் இல்லாமல் ஆகிவிடுவதால் நிர்வாக செலவுகளுக்கே பெரும் தடுமாற்றங்கள் ஏற்படுகிறது.
ஹஜ்ரத் சம்பளம் முஅத்தின் சம்பளம்
மின்சாரம்,தூய்மை செய்வது,பராமரிப்பு செலவுகள் என ஒரு கணிசமான தொகைகள் செலவுகளுக்கு பணம் தேவைப்படுகிறது.
ஜும்மாக்களில் செய்யப்படும்
வசூல்கள் போதுமானதாக இல்லை.
சந்தாக்கள் வசூல் மீதி தேவைகளை நிர்வாகிகள் பகிர்ந்து கொள்வது என பள்ளிவாசல் நிர்வாகங்கள் நடைபெறுகிறது.
இன்றைய சில கொடையாளிகள் முழு பள்ளிவாசலையும் கட்டிக் கொடுத்துவிட்டு அந்த ஊரின் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வஃக்ப் செய்து விடுகிறார்கள்.
இதுபோன்று பல ஊர்களில் கட்டப்படும் பள்ளிவாசல்கள் தனிநபரோ அல்லது பலரின் உதவியாலோ கட்டப்படும் பள்ளிவாசல்கள் பொதுமக்களுக்காக வஃக்ப் செய்யப்பட்டாலும்,
இவைகள் வஃக்ப் வாரியத்தில் பதியப்படுவதில்லை.
பல இடங்களில் தனி டிரஸ்ட்டுகளாக அமைக்கப்பட்டு நிர்வாகங்கள் நடைபெற்று வருகிறது.
இன்றைய பாசிசூழலில் இந்த நடைமுறைகளே இப்போதைக்கு சிறப்பாக தெரிகிறது.
வஃக்ப் வாரியத்தில் பதியாததால் வஃக்ப் வாரியத்தியத்தில் இருந்து
ஏதும் உதவிகள் கிடைக்காது எனினும் இன்றைய சூழலில் பாதுகாப்பானதாக இருக்கிறது.
வஃக்ப் வாரியத்தில் பதியப்பட்ட வஃக்ப் நிறுவனங்கள் எல்லாமே வாரியத்திற்கு சகாயத்தொகை கட்டத் தேவையில்லை.
குறிப்பிட்ட வருமானங்கள் வரும் வஃக்ப்புகள் மட்டுமே 7% சகாயத் தொகைகளை கட்ட வேண்டும்.
வஃக்ப் வாரிய உறுப்பினர்களை (முத்தவல்லிகளை) உறுப்பினராக தேர்ந்தெடுக்க நடைபெறும் தேர்தலில் இவர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும் என்று எண்ணுகிறேன்.
புதிதாக கட்டப்படும் பள்ளிவாசல்கள் மற்றும் மதரசாக்களுக்கு நிரந்தர வருமானம் ஒருவகையில் ஏற்பாடுகள் செய்வது காலத்தின் அவசியமாகும்.
இதுபோன்ற சூழல்களில் நல்ல சம்பளங்கள் இமாம்களுக்கு கொடுக்க முடிவதில்லை.
அப்போது குறைந்த சம்பளத்தில் இமாம்கள் நியமிக்கப்படும் போது அவர்களின் பொருளாதார நிலையால் பலவற்றை அனுசரித்து போகும் சூழலில் அது அவர்களுக்கான பின்னடைவாக மாறிப் போகிறது.
இனி புதிய வஃக்ப் திருத்த சட்டத்தையும் அதனை நாம் எவ்வாறு எதிர்கொள்ளலாம் என்பதையும் கலந்துரையாடலாம்.
வஃக்ப்பின் பல பரிமாணங்களை தொடர்ந்து பேசுவோம்..!
கவிஞர், கப்ளிசேட்!