கீழக்கரையில் பள்ளிகளை பற்றிய போலியான கருத்துக்கணிப்பு… இஸ்லாமியா பள்ளியின் தாளாளர் கண்டனம்..

கீழக்கரையில் பல்வேறு கல்வி நிறுவனங்கள் சிறப்பான கல்வியை மக்களுக்கு வழங்கி வருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.  ஆனால் கடந்த சிலநாட்களாக ஆதாரமில்லாத சில இணையதளங்களில் சிறந்த பள்ளிகூடம் எது என மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் வண்ணம் கருத்து கணிப்பு வலம் வந்து கொண்டிருக்கிறது.

இது சம்பந்தமாக கீழக்கரை இஸ்லாமியா பள்ளி குழுமத்தின் தாளாளர் MMK.முகைதீன் இபுராஹிம் கூறுகையில், “கீழக்கரையில் உள்ள அனைத்து பள்ளிகளுமே மாணவர்களுக்கு தரமான கல்வியைதான் வழங்கி வருகிறார்கள். இதுபோன்ற கருத்து கணிப்புக்கள் பெற்றோர்கள் மத்தியிலும், மாணவர்கள் மத்தியிலும் தேவையில்லாத குழப்பத்தையே ஏற்படுத்தும். பள்ளியின் தரத்தை அரசாங்க கல்வித்துறை மட்டுமே கணிக்க முடியும், இது போன்ற ஆதாரமில்லாத, போலியான இணைய தளங்கள் நிர்ணயிக்க முடியாது, இது மிகவும் கண்டனத்துக்குரியது, மேலும் இது போன்ற கருத்து கணிப்புகளை மக்கள் புறந்தள்ள வேண்டும் என கேட்டு கொள்கிறேன்” என கூறினார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!