வேலூர் பகுதிகளில் கள்ள நோட்டு மாற்ற முயன்றவர்கள் கைது…

ஆலங்குப்பத்தில் பச்சையம்மாள் பெட்டி கடை நடத்தி வருகின்றார் அவரிடம் நேற்று இரவு வாலிபர் ஒருவர் 2 ஆயிரம் ரூபாய் கொடுத்து பொருட்களை வாங்கினார், பச்சையம்மாளுக்கு  நோட்டீன் மீது சந்தேகம் எழுந்ததை தொடர்ந்து  பக்கத்தில் இருந்தவர்களிடம் இதை காண்பித்தபோது இது கள்ள நோட்டு என்று தெரிய வந்தது. உடனே அப்பகுதி  பொதுமக்கள் அந்த நபரை பிடித்து ஆம்பூர் போலீசில் ஒப்படைத்தனர்.

அதே போல்  வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே கள்ள நோட்டுகளை மாற்ற முயன்றது தொடர்பாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜோலார்பேட்டையை அடுத்த வக்கனம்பட்டியை சேர்ந்த அலெக்ஸாண்டர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் கள்ள நோட்டுகளை அச்சடிக்க வைத்திருந்த ஜெராக்ஸ் இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது. ஆலங்குளத்தில் ரூ.2000 கள்ள நோட்டுகளை மாற்ற முயன்றதாக சதாம் உசேன் என்பவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கே.எம்.வாரியார், மாவட்ட செய்தியாளர்,வேலூர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!