மதுரை மாவட்டத்தில் சமீப காலமாக நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 100 500 2000 புதிய ரூபாய் நோட்டுகள் அதிக அளவில் கடன் வழங்குவதால், கள்ள நோட்டுகள் புழங்குவதாக வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர். இதை தடுக்க காவல்துறையும் ரிசர்வ் வங்கியும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுக்கிறது.
சமீபத்தில் தனியார் நிறுவனத்திற்காக வியாபார ரீதியாக வசூல் செய்து வந்த தொகையிலும் கள்ள நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகளும், பொதுமக்களும் பெரும் கலக்கத்தில் உள்ளனர். மேலும் வியாபாரிகளிடமும், பொதுமக்களிடமும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய வேண்டும் என வியாபாரிகள் சங்கம் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.
செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print












