இராமநாதபுரம் அருகே மினரல் வாட்டர் நிறுவனத்தில் கள்ள நோட்டுகள், போதை பொருட்கள் பறிமுதல்..இருவர் சிக்கினர்..

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் பிரப்பன்வலசையில் மினரல் வாட்டர் தயாரிப்பு நிறுவனம் செயல்படுகிறது. இத்தனியார் நிறுவனத்தில் கள்ள நோட்டுகள் இருப்பதாகவும், இலங்கைக்கு கடத்துவதற்காக போதை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கியூ பிராஞ்ச் போலீசாருக்கு செல்போன் மூலம் கிடைத்தது.

இத்தகவல் தொடர்ந்து வந்ததால் உஷாரான போலீசார் மினரல் வாட்டர் தயாரிப்பு நிறுவனத்தில் சோதனை நடத்தினர். அங்கு 200 ரூபாய் நோட்டு 67, 100 ரூபாய் நோட்டு 59, 500 ரூபாய் நோட்டு 70 என 54,300 ரூபாய் இருப்பது தெரிந்தது. அந்நிறுவனத்தில் 3 பொட்டலங்களாக ஒரு கிலோ போதை பொருள் இருந்தது.  மேலும் விசாரணையில் நொச்சியூரணி சீனிவாசன் மகன்கள் சிவசங்கரன் 25, சிவ காந்தன் 23 ஆகியோருக்கு சொந்தமானது எனவும், பல முறை சொல்லியும் நிறுவனத்தை அவர்கள் காலி செய்யவில்லை என்றும் தெரிய வருகிறது.  அதே சமயம் முன்விரோதம் காரணமாக கள்ள நோட்டு, போதை பொருட்களை வைத்திருக்கலாம் எனவும்  சந்தேகிக்கப்படுகிறது.

இதையடுத்து சிவகாந்தன், சிவசங்கரனை உச்சிப்புளி போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்தனர். கள்ள நோட்டுகள் எப்படி வந்தன. இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? கண்டெடுக்கப்பட்ட போதை பொருள் உண்மையானதா ? போலியா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை தொடர்கிறது . கள்ள நோட்டு, போதை பொருள் இருந்த பை போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!