மதுரை பழங்காநத்தம் பகுதியில் போலி மருத்துவரை காவல்துறை கைது செய்து நடவடிக்கை..

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் காய்ச்சல் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது, இந்த நிலையில் மருந்தகம் மருத்துவ சார்ந்த மருத்துவ மனைகள் அத்தியவசியமான தேவையான கடைகள் திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்த நிலையில்  மதுரை தெற்குவாசல் பகுதியில் வசித்து வரும் முரளி கண்ணன் என்பவர் பழங்காநத்தம் மருதுபாண்டி நகர் பகுதியில் ஓம் முருகா கிளினிக் என்று அரசு மருத்துவர் என்று கூறி பத்து வருடங்களுக்கு மேலாக மருத்துவமனை நடத்தி பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் அவர் சிகிச்சையில் சந்தேகம் அடைந்த அதே பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவருக்கு போலி மருத்துவர் மருத்துவமனை நடத்தி வருவதாகபுகார் அளித்துள்ளனர்.

அப்புகாரின் அடிப்படையில் மருத்துவ இணை இயக்குனர் சிவகுமார் நிர்மலா தேவி, மருந்துகள் ஆய்வாளர் எஸ் எஸ் காலனி ஆய்வாளர் அருணாச்சலம், திருப்பரங்குன்றம் தலைமை மருத்துவர் செல்வராஜ் ஆகியோர் உதவியுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலி டாக்டர் முரளி கண்ணனை கைது செய்து விசாரணை செய்தனர்.

அந்த விசாரனையில் அவர் பத்தாம் வகுப்பு வரை படித்திருப்பதாக தெரிவித்தார். மேலும் மருத்துவமனை பதிவு என்னை சரி பார்க்கும் பொழுது, அப்பதிவு எண் சேலத்தைச் சேர்ந்த கண்ணகி கந்தசாமி மருத்துவருடையது என்பது தெரியவந்தது.

அதனை அடுத்து மருத்துவமனையை சீல் வைத்து எஸ் எஸ் காலனி காவல்துறை கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!