கீழக்கரையை சார்ந்த ஃபஹீம் எனும் மாணவன் கீழக்கரை வடக்கு தெரு முகைதீனியா பள்ளியில் ஆரம்ப கல்வி படித்தவர். பின்னர் அவர் பெற்றோர்களுடன் அமீரகம் சென்று அங்குள்ள Our Own பள்ளியில் படித்து வருகிறார். இவர் அப்பள்ளி மாணவர்களின் மத்தியில் ஒரு கதானாயகனாகவே போற்றப்படுகிறார், காரணம் அவருடைய அபார ஞாபக சக்தி.

இவர் 1 முதல் 5000 ஆண்டுக்குள் உள்ள நாட்களை தேதியை சொன்ன அடுத்த நிமிடம் கூறக்கூடிய திறனாளி, அதே போல் எந்த நாட்டின் தலைநகரத்தையும், தேசியக்கொடிகளை வைத்து நாட்டின் பெயரையும் கண் இமைக்கும் பொழுதில் கூறக்கூடியவர். மேலும் 1 முதல் 15 இலக்கம் எண்களின் தொகையையும் சுலபமாக கூறும் திறமை கொண்டவர். எண்கள், வண்ணங்கள் ஆகியவற்றை பார்த்த சில வினாடிகளில் மனதில் நிறுத்தி வைக்கும் திறன் கொண்டவர்.

சமீபத்தில் ஆமீரகம் மற்றும் இந்தியாவில் தேசிய அளவில் அவருக்கு பல பாராட்டு பத்திரங்களும் பரிசுகளும் வழங்கப்பட்டது. அதில் ஒன்று ராமநாதபுரம் ஆட்சியரிடமிருந்து ACHIEVER BOOK OF RECORDS CERTIFICATE வாங்கியது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய திறமைகளை கொண்ட அம்மாணவனுக்கை கீழக்கரை வடக்கு தெரு முகைதீனியா பள்ளியில் நாளை ( சனிக்கிழமை, 09-09-2017) மாலை 04.00 மணியளவில் அவர் திறமைகளை கௌவரவப்படுத்தும் விழா பள்ளி நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்விழாவில் அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளே மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


Faheem’s personal website
http://www.faheem.kilakkarai.com-
Masha allah, My Best wishes to Faheen