திருப்பூர் அருகே அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய கோயில் அகற்றப்பட்டது எனவும், அரசு நிலத்தில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட கொட்டகை உள்ளிட்ட கட்டுமானம் அகற்றப்பட்டதை வைத்து வதந்தி பரப்பப்பட்டு வருவதாகவும் தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.

வதந்தி : திருப்பூர் மாவட்டம் ராக்கியாபட்டியில் உள்ள செல்வ முத்துக் குமாரசாமி திருக்கோவிலை தமிழ்நாடு அரசு இடிக்க முயற்சிப்பதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதனை 300 ஆண்டுகள் பழமையான குமரன் குன்று என்றும் இந்து முன்னணி அமைப்பினர் தெரிவித்து வருகின்றனர்.
உண்மை என்ன ? : இது முற்றிலும் தவறான தகவல். திருப்பூர் மாவட்டம், அவினாசி வட்டம் ஈட்டி வீரம்பாளையம் பஞ்சாயத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு தொகுப்பு வீடு கட்டுவதற்காக 28.06.2024 அன்று இந்த இடம் மாவட்ட ஆட்சியரால் மாற்றம் செய்யப்பட்டது. நில மாற்றம் செய்தபோது அங்கு வழிபாட்டுத் தலங்களோ, புரதானச் சின்னங்களோ இல்லை.
கடந்த 2024 ஜூன் மாதம் சிலர் எவ்வித முன் அனுமதியுமின்றி அந்த இடத்தில் முருகன் சிலை வைத்து சிறிய கொட்டகை அமைத்து வழிபாடு செய்தனர். அங்கு குமரன் குன்று என்ற கோவில் உள்ளதாகவும், அதனை ஆக்கிரமிக்க முயற்சிப்பதாகவும் பரப்பப்படும் தகவல் உண்மைக்குப் புறம்பானது என்று அவினாசி வட்டாட்சியர் தெரிவித்துள்ளார். அரசு நிலத்தில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட கொட்டகை உள்ளிட்ட கட்டுமானம் அகற்றப்பட்டதை வைத்து வதந்தி பரப்பி வருகின்றனர்.
வதந்தியைப் பரப்பாதீர் !
SOURCE : THE FACTCHECK UNIT, GOVERNMENT OF TAMILNADU.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









