இராமநாதபுரம் இராமநாதபுரம் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, ஹெல்பேஜ் இந்தியா சார்பில் இலவச கண், பொது மருத்துவ முகாம் மண்டபம் பேரூராட்சி திருமண மஹாலில் இன்று நடந்தது. பேரூராட்சி தலைவர் ராஜா துவக்கி வைத்தார். கவுன்சிலர் முபாரக் தலைமை வகித்தார். அக்வா அக்ரி மண்டபம் கிளை முருகேசன், பரம்பரை விசைப்படகு மீனவர் சங்கத்தலைவர் ஆஸாத் முன்னிலை வகித்தனர்.
டாக்டர் அழகுவேல் மணி தலைமையில் பொது மருத்துவம், டாக்டர் ரம்யா தலைமையில் கண் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஹெல்பேஜ் இந்தியா ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் ராஜா, முகாம் ஒருங்கிணைப்பாளர்கள் வெங்கடேஷ், ஆரோக்யராஜ், கவுன்சிலர்கள் வாசிம் அக்ரம், முஹமது மீரா சாஹிப், ஜன்னத் ஷகிலா ஏற்பாடு செய்தனர்.
You must be logged in to post a comment.