பெத்தநாடார்பட்டியில் கருவிழி நோய் கண்டறியும் சிறப்பு முகாம்; 93 நோயாளிகளுக்கு கண் பரிசோதனை..

பெத்தநாடார்பட்டியில் கருவிழி நோய் கண்டறியும் சிறப்பு முகாம்; 93 நோயாளிகளுக்கு கண் பரிசோதனை..

பெத்தநாடார்பட்டியில் அரவிந்த் கண் மருத்துவமனை பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம், கண் தான விழிப்பு விழிப்புணர்வு குழு இணைந்து கருவிழி நோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது. இதில் 93 பேர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு பெத்தநாடார்பட்டி தொழிலதிபர் கலைச்செல்வன் தலைமை தாங்கினார். பாவூர்சத்திரம் கண்தான விழிப்புணர் குழு நிறுவனர் இளங்கோ, பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க செயலாளர் சசி ஞானசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத் தலைவர் அருள் ஆனந்தன் வரவேற்றார். பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க செயலாளர் தங்கராஜ் தொகுப்புரையாற்றினார். நிகழ்ச்சியை 324A மாவட்ட ஆளுநர் பிரான்சிஸ் ரவி மற்றும் அவரது துணைவியார் மாவட்ட முதல் பெண்மணி பிரமிளா ரவி இணைந்து துவக்கி வைத்தார்கள். முகாமில், 93 நோயாளிகளுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. 324A மாவட்ட அமைச்சரவை செயலாளர் சுப்பையா, வட்டாரத் தலைவர் மதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை அரவிந்த் மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பெத்தநாடார் பட்டி பஞ்சாயத்து அலுவலர் கடல் மணி ஆகியோர் செய்தனர். பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க பொருளாளர் சினேகா பாரதி நன்றி கூறினார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

Abubakker Sithik

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!