கீழப்பாவூரில் இலவச கண் பரிசோதனை முகாம்; 46 நோயாளிகள் அறுவை சிகிச்சைக்கு தேர்வு..

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் பகுதியில் 60-வது இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. இதில் 46 நோயாளிகள் கண்புரை அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர். மேட்டூர் புனித ஜோசப் கல்வியியல் கல்லூரி மற்றும் கலை, அறிவியல் கல்லூரி, பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம், கண்தான விழிப்புணர் குழு, பாரதிதாசன் பல்கலைக்கழக தொலைதூர கல்வி நிறுவனம், ரெடி கல்வி மையம் இணைந்து அரவிந்த் கண் மருத்துவமனை உதவியுடன் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு புனித ஜோசப் கல்வி நிறுவனங்களின் செயலர் சே. சகாய ஜான் தலைமை தாங்கினார். பாரதிதாசன் பல்கலைக்கழக தொலைதூர கல்வி நிறுவனம் ரெடி கல்வி மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் D. வில்சன் அருளானந்தம், பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க முன்னாள் பொருளாளர் Ln S. பரமசிவன் மற்றும் Ln S.ஜேக்கப் சுமன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். புனித ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் இரா. குளோரி தேவ ஞானம் வரவேற்புரை ஆற்றினார்.

முகாமில், பாவூர்சத்திரம் கண் தானம் விழிப்புணர் குழு நிறுவனர் Ln K.R.P. இளங்கோ தொகுப்புரை ஆற்றினார். மருத்துவர்கள் Dr சுவேதா, Dr சுவாதி கிருஷ்ணன் ஆகியோர் பரிசோதனை செய்து தேவையான மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர். 161 நோயாளிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டு அதில் 46 நோயாளிகள் கண் புரை அறுவை சிகிச்சைக்கு அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிகழ்வில் துணை முதல்வர் முனைவர் இர. ரேச்சல் மேனகா, பேராசிரியை S. ஜெயசுகி மற்றும் பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும், மருத்துவர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் செவிலியர்களுக்கு நினைவு பரிசும் வழங்கப்பட்டது. அரவிந்த் கண் மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் A.பாலகிருஷ்ணன், R.சுனில் குமார், உடற்கல்வி இயக்குனர்கள் A. தூய அலெக்ஸ் மற்றும் R.சிவராஜா, நூலகர் D.தீபன் பாக்கியராஜ் மற்றும் பேராசிரியர்கள் கல்லூரி தன்னார்வ மாணவ, மாணவிகள் ஆகியோர் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!