உசிலம்பட்டி சக்கரவர்த்தி வித்யாலயா பள்ளியில் இலவச மாபெரும் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது பள்ளி தாளாளர் முனைவர் வேல்முருகன் தலைமையில் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியை அமுதபப்ரியா முன்னிலைவகித்தார்கள். இலவச கண் சிகிச்சை முகாமினை நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் ராஜேந்திரன் மற்றும் மம்மி டாடி உரிமையாளர் நிஜாமுதீன் ஆகியோர் முகாமினை துவக்கி வைத்தார்கள் .பெற்றோர்கள்/ மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் பயனடைந்தார்கள்.கண் குறை பாடு கண்ணில் சதை வளர்ச்சி கிட்டப் பார்வை தூரப்பார்வை குறைபாடுகள் இந்த கண்ணில் நீர் கசிதல் போன்ற கண் சம்பந்தமான நோய்களுக்கு இலவசமாக ஆலோசனைகளும் வழங்கப்பட்டது .கண் கண்ணாடிகள் வழங்குவதற்கும் /கண் ஆபரேஷன் செய்வதற்குமான வழிகாட்டுதலும் வழங்கப்பட்டது .ஐ பவுண்டேஷன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி செய்தி தொடர்பாளர் ஜெயபிரகாஷ் மற்றும் ஆசிரிய பெருமக்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்கள்.
உசிலை மோகன்
You must be logged in to post a comment.