பிரபல ஊடகங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து பிரதமரை தேர்ந்தெடுக்கிறதா? என்ற கேள்வி பொதுமக்களிடத்தில் எழுந்துள்ளது. ஜனநாயகத்தை விடுத்து பணநாயகத்தை நோக்கி பிரபல ஊடகங்கள் செல்வதாக சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். கடந்த கால பிரபல ஊடகங்களின் கருத்துக்கணிப்பு ஒரு பார்வை:
2014 ல் பிஜேபி மட்டும் வென்ற தொகுதிகள்-285
உத்திரபிரதேசம்-71
மத்திய பிரதேசம்-27
குஜராத்-26
ராஜஸ்தான்-25
மகாராஷ்டிரா-23
பீகார்-22
ஆந்திரா-17
ஜார்கண்ட்-14
கர்நாடகா-12
சத்தீஸ்கர்-10
அஸ்ஸாம்-07
ஹரியானா-07
டில்லி-07
உத்தரகாண்ட்-05
ஹிமாச்சல்-04
ஜம்மு-காஷ்மீர்-03
தெலுங்கானா-02
பஞ்சாப்-02
மேற்கு வங்கம்-02
கோவா-02
அருணாச்சல பிரதேசம்-01
ஒரிஸ்ஸா-01
அந்தமான்-01
சண்டிகார்-01
தாத்ரா நாகர் ஹவேலி-01
டையூ-டாமன்-01
தமிழ்நாடு-01
இந்தியா முழுமையும் மோடி அலை வீசியதாக சொல்லப்பட்ட போது வெற்றி பெற்ற எண்ணிக்கை இது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு இந்தியா முழுவதும் மோடி எதிர்ப்பலை வீசும் போது இதில் எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்?
தமிழ்நாடு-39
கேரளா-20
ஆந்திரா-25
கர்நாடகா-28
ஒரிஸ்ஸா-21
உத்திரபிரதேசம்-80
மேற்கு வங்கம்-42
ராஜஸ்தான்-25
மத்திய பிரதேசம்-29
சத்தீஸ்கர்-11
பாண்டிச்சேரி-01
மொத்தம்-543
இதில் மேலேயுள்ள மாநில தொகுதிகள்-321
இந்த 321 தொகுதிகளில் பிஜேபி கூட்டணி வெற்றி பெறும் தொகுதிகள் எத்தனை?. மீதமுள்ள 543-321=222 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு தேவையான 271 பெற அனைத்து தொகுதியிலும் வெற்றி பெற வேண்டும். இதற்கு வாய்ப்புள்ளதா? இல்லை என்பதே பதிலாக இருக்க முடியும்.
பா.ஜ.க ஆட்சியைக் கைப்பற்றும் என ஊளை விட்டுக்கொண்டே இருக்கிறார்கள். காலம் சென்ற வாஜ்பாய் 350 தொகுதிகளை கைப்பற்றுவார் என அப்போது கருத்து கணிப்புகள் சொல்லிக் கொண்டே இருந்தார்கள். 150 ஐ தாண்டவில்லை.
தற்போது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு என்ற பெயரில் மோடி வெற்றி பெறுவார் என்று சொல்லப்படும் செய்திகள் மூலம் இவர்கள் வாக்கு இயந்திரத்தில் தவறுகள் செய்திருந்தால் அதை ஏற்க வைக்க முன்கூட்டி மக்களின் மனநிலையை தயார்படுத்தும் ஏற்பாடாக கூட இருக்கலாம் எனவும் பொதுமக்கள் கருத்துக்கள சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
அதற்கு வாய்ப்பில்லை என்றால் மோடி கருத்துக் கணிப்பு பிரதமராக மட்டுமே இருக்க முடியும் என்பது மட்டுமே நிதர்சனம்.
செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக் மற்றும் நிருபர் குழு..





You must be logged in to post a comment.