நவீன உலகில் இளைய சமுதயாம் உலக வாழ்கையில் கிடைக்கும் இன்பத்தில் திளைத்திருக்கும் இத்தருணத்தில், கீழக்கரையைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் ஒன்று கூடி இவ்வுலகிற்கு பின்னாலும் நிரந்தரமான வாழ்க்கை உண்டு என்பதை உணர்ந்து மற்றவர்களும் அப்பலனை அடைய வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியுள்ளது மிகவும் பாராட்டுதலுக்குரிய விசயம்.
அந்த முயற்சியின் வெளிப்பாடுதான் “அமைதியை நோக்கி” என்ற இஸ்லாமிய வாழ்வியல் கண்காட்சி. இக்கண்காட்சி கீழக்கரை ஹுசைனியா மஹாலில் வரும் ஜனவரி 19 மற்றும் 20ம் தேதி, காலை 09.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை நடைபெற உள்ளது. இக்கண்காட்சியில் வாழ்கையை இஸ்லாத்தின் அடிப்படையில் அமைப்பது எவ்வாறு என்ற வழிமுறைகளும் செய்முறை விளக்கங்களும் தர நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் ஏற்பாடு செய்துள்ளார்கள்.
மேலும் இக்கண்காட்சியில் இஸ்லாமியம் பற்றிய தவறான கண்ணோட்டங்களை களையும் வகையில் விளக்கங்களும், பிற மத சகோதரர்களும் இஸ்லாத்தை உண்மையான வடிவில் அறிந்து கொள்ளும் வகையில் பல விளக்கப் பதாகைகளும், ஒளிக் காட்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் பெண்களும் எந்த தடங்கலும் இல்லாமல் கண்காட்சியை காணும் வகையில் அவர்களுக்கென பிரத்யேக வழிகளும், இட வசதிகளும் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. மேலும் இந்தக் கண்காட்சியை காண்பதற்கு கட்டணம் எதுவும் இல்லை, இலவசமாகவே அனைத்து ஏற்பாடுகளும் அனைவரும் பயன் பெற வேண்டும் என்ற அடிப்படையில் செய்யப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியை கீழக்கரை தஃவா குழுவினர் ஏற்பாடு செய்துள்ளனர். இக்கண்காட்சியை பற்றிய மேல் விபரங்களுக்கு 99526 37233 அல்லது 94436 11143 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print










