அமீரகத்தில் இயங்கி வரும் பணம் பரிமாற்றம் (Money Exchange) செய்யும் ஒரு நிறுவனம் எந்த வித முன் அறிவிப்பின்றி மூடப்பட்டதால் அதன் மூலம் சொந்த நாட்டுக்கு பணம் அனுப்பிய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
அபுதாபியில் 2 கிளைகளும், துபாயில் 3 மூன்று கிளைகளும், சார்ஜாவில் 1 கிளையும் மொத்தம் ஆறு கிளைகள் இயங்கி வந்தது.பெயர் குறிப்பிடப்படாத அந்த பணப் பரிமாற்றம் (Money Exchange) செய்யும் நிறுவனத்தின் உரிமையாளர் பல லட்சம் மதிப்புள்ள திர்ஹம் மோசடி செய்து அலுவலகத்தை மூடிவிட்டு தலைமறைவு ஆகிவிட்டதாக ஏமாற்றம் அடைந்த வாடிக்கையாளர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அந்த எக்ஸ்சேஞ்சின் மூலம் தாயகத்திற்கு அனுப்பிய சேமிப்பு பணம் கஷ்டப்பட்டு ஈட்டியது என்றும் அந்த பணத்தை ஒரே இரவில் இழந்துவிட்டோமே என்று நினைக்கும் போது மிகுந்த வேதனை அளிப்பதாக வாடிக்கையாளர்கள் கூறினார்கள். இது குறித்து அபுதாபி நீதி மன்றத்தில் புகார் கொடுத்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் அமீரகத்தில் இருந்து வெளியாகும் கலீஜ் டைம்ஸ் பத்திரிக்கைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த மோசடியினால் தனி நபரின் தொகை 1000 திர்ஹம் முதல் 45000 திர்ஹம் வரை ஏமாற்றப்பட்டுள்ளதாக வாடிக்கையாளர்கள் மிகுந்த மன உளைச்சலுடன் தெரிவித்துள்ளார்கள்
சேலத்தை சார்ந்த முருகன் என்பவர் வீடு கட்டுவதற்காக வாங்கிய கடனை அடைக்க அனுப்பிய பணம் 3 நாட்கள் ஆகியும் போய் சேரவில்லை என்பதை அறிந்து அவர் எக்ஸ்சேஞ்சை தொடர்பு கொள்ளும் போது தொழில் நுட்ப கோளாறு காரணமாக தாமதாகிவிட்டது என்று ஊழியர் தொரிவிதுள்ளார், பின்னர் தான் அனுப்பிய பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதை அறிந்த அவர் மனம் உடைந்து போயுள்ளார்.

அமீரகம் முழுவதும் வைரலாக பரவிய செய்தி மோசடி செய்தி அமீரகத்தில் தொழில் தொடங்க அனுமதி வழங்கிய உள்ளூர் அரபிக்கும் எட்டியது. அவரும் உடனே அவர் காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டு உரிமையாளரின் கடவு சீட்டை ( passport) முடக்க அனைத்து முயற்சியும் எடுத்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து மத்திய வங்கிக்கு அந்த ஸ்பான்சர் புகார் கொடுத்தாகவும், பண மோசடிக்கு விரைவில் தீர்வு எட்டபட்டு வாடிக்கையாளரின் பணத்தை திரும்ப செலுத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்…

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print










சும்ம மொட்டயா போட்ட…..நிறுவன பெயர் இல்லையா????