முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் விதவையர்களின் குழந்தைகளுக்கு ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மற்றும் கல்லூரி படிப்புகளுக்கு ரக்ஷா மந்திரி முன்னாள் படைவீரர் நலநிதி வாயிலாகவும் (RMEWF) தொழிற்கல்விசார்ந்த பட்டப் படிப்புகளுக்கு பாரதப் பிரதமர் கல்வி உதவித்தொகை திட்டம் வாயிலாகவும் (PMSS) கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். இளநிலை படை அலுவலர் தரத்திலுள்ள முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு ரூ பாரதப் பிரதமர் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இயலாத முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு தொகுப்புநிதி கல்வி உதவித்தொகை (AF) வழங்கப்பட்டு வருகிறது.
ரக்ஷா மந்திரி முன்னாள் படைவீரர் நலநிதி கல்வி உதவித்தொகை திட்டம் (RMEWF):
முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் விதவையர்கள் ரக்ஷா மந்திரி முன்னாள் படைவீரர் நல நிதியிலிருந்து கல்வி உதவித்தொகை பெற படைவிலகல் சான்று, முன்னாள் படைவீரர் அடையாள அட்டை, முன்னாள் படைவீரரின் புகைப்படம், முன்னாள் படைவீரரின் ஆதார் அட்டை, முன்னாள் படைவீரரின் வங்கிக் கணக்குப் புத்தகம், மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி, ஓய்வூதிய ஆணை, குழந்தைகளின் முந்தைய ஆண்டு மதிப்பெண் சான்றிதழ், படைவிலகல் சான்றிலுள்ள குடும்ப விவரம் பகுதி – II ஆணையில் பதிவு செய்யப்பட்ட விவரம், மாநில அரசிடமிருந்தோ அல்லது தற்போது வேலை பார்க்கும் அலுவலகத்திலிருந்தோ குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை ஏதும் பெறவில்லை என்பதற்கான உறுதிமொழி ஆகிய ஆவணங்களுடன் www.ksb.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயன் பெறலாம். 1 முதல் 9-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு பயின்றுவரும் குழந்தைகளுக்கு 30.09.2018 வரையிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பயின்றுவரும் குழந்தைகளுக்கு 30.10.2018 வரையிலும் கல்லூரி படிப்புகளுக்கு 30.11.2018 வரையிலும் 2 குழந்தைகளுக்கு மட்டும் கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கலாம்.
பாரதப் பிரதமர் கல்வி உதவித்தொகை திட்டம் (PMSS):
தொழிற்கல்விசார்ந்த பட்டப் படிப்புகளுக்கு பாரதப் பிரதமர் கல்வி உதவித்தொகை திட்டத்திலிருந்து கல்வி உதவித்தொகை பெற படைவிலகல் சான்று, முன்னாள் படைவீரர் அடையாள அட்டை, முன்னாள் படைவீரர் மற்றும் குழந்தைகளின் புகைப்படம், முன்னாள் படைவீரர் மற்றும் குழந்தைகளின் ஆதார் அட்டை, முன்னாள் படைவீரர் மற்றும் குழந்தைகளின் வங்கிக் கணக்குப் புத்தகம், மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி, ஓய்வூதிய ஆணை, குழந்தைகளின் 10-ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு/UG/DIPLOMA மதிப்பெண் சான்றிதழ் (நேர்விற்கேற்ப), முன்னாள் படைவீரர் சான்றிதழ், போனபைட் சான்றிதழ், குழந்தைகளின் வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்பட்டதற்கான சான்றிதழ் ஆகிய ஆவணங்களுடன் www.ksb.gov.in என்ற இணையதளத்தில் 15.11.2018 வரையில் 2 குழந்தைகளுக்கு மட்டும் கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கலாம்.
தொகுப்புநிதி கல்வி உதவித்தொகை திட்டம் (AF):
முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் விதவையர்கள் தொகுப்புநிதியிலிருந்து கல்வி உதவித்தொகை பெற படைவிலகல் சான்று, முன்னாள் படைவீரர் அடையாள அட்டையுடன் முன்னாள் படைவீரர் நல துணை இயக்குநர் அலுவலகத்தில் கல்வி உதவித்தொகை படிவம் பெற்று பூர்த்தி செய்து, பூர்த்தி செய்யப்பட்ட படிவத்துடன் கல்வி மற்றும் விடுதிக் கட்டண அசல் இரசீது, முன்னாள் படைவீரர் மற்றும் குழந்தைகளின் பெயரில் துவங்கப்பட்ட வங்கிக் கணக்குப் புத்தகம், குழந்தைகளின் முந்தைய ஆண்டு மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களுடன் சமர்பித்து பயன்பெறலாம்.
முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் விதவையர்கள் பாரதப் பிரதமர் கல்வி உதவித்தொகை திட்டம் ஃ ரக்ஷா மந்திரி முன்னாள் படைவீரர் நலநிதி கல்வி உதவித்தொகை திட்டம் மற்றும் தொகுப்புநிதி கல்வி உதவித்தொகை திட்டம் ஆகிய திட்டங்களில் தங்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பித்து பயன்பெறுமாறும், மேலும் முன்னாள் படைவீரர்கள் /சார்ந்தோர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் பற்றிய விவரங்களை அறிந்துகொள்ள www.ksb.gov.in என்ற இணையதளத்தினை பார்வையிடலாம்.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print











