இலங்கை கடற்படையினரின் துப்பாக்கி சூட்டில் பலியான தங்கச்சி மடம் மீனவர் பிரிட்ஜோவின் உடலை வாங்க மறுத்து தங்கச்சிமடத்தில் உள்ள தேவாலயத்தில் மீனவர்கள், இளைஞர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் 6-வது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தினந்தோறும் பல்வேறு கட்சியின் தலைவர்கள், அமைப்பினர் தங்கச்சிமடத்துக்கு வந்து செல்கின்றனர். நேற்று நேற்று முன் தினம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் முத்தரசன், தமிழ் மாநில கட்சி தலைவர் ஜி.கே.வாசன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் தனபாலன் ஆகியோர் வந்து ஆதரவு தெரிவித்து பேசினர்.

இந்நிலையில் நேற்று 11.03.17 தங்கச்சிமடம் வந்த தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் மீனவ மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மக்கள் மத்தியில் உரையாற்றினார். அவருடன் ஏராளமான கட்சி தொண்டர்கள் திரளாக வந்து கலந்து கொண்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









