வாக்காளர் ஒப்புகை சீட்டு : விழிப்புணர்வு இயக்கம் பிரச்சார வாகனத்தை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கொடியசைத்து துவக்கி வைத்தார்..

வாக்காளர் ஒப்புகை சீட்டு விழிப்புணர்வு இயக்க பிரச்சார வாகனத்தை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்காளர் விழிப்புணர்வு பணிகள் துவக்க நிகழ்ச்சி இன்று காலை தூத்துக்குடி காய்கறி மார்க்கெட் அண்ணா சிலை ரவுண்டானா பகுதியில் நடைபெற்றது ,

ஆட்சியர் சந்தீப் நந்தூரி அதனை தொடக்கி வைத்து பேசுகையில், “இந்த பேரணியின் நோக்கம் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 1593 வாக்குச்சாவடிகளில் 800 வாக்குச் சாவடிகளில் அடுத்த ஐந்து நாட்களில் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று 90 நிமிடங்கள் வாக்களிப்பது எப்படி இந்த இயந்திரங்கள் எப்படி வேலை செய்யும், எப்படி பதிவு செய்யலாம் என்பது குறித்து பொதுமக்களிடம் தெளிவுபடுத்த இந்த முகாம் நடைபெறவுள்ளது

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர் ஒப்புகை சீட்டு இயந்திரம் (EVM -VVPAT )தொடர்பான வாகன விழிப்புணர்வு இயக்கம் 9ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நடத்தப்பட உள்ளது

“தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 6 சட்டமன்ற தொகுதிக்கும் தலா 6 விழிப்புணர்வு வாகனங்கள் என மொத்தம் 36 வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது விழிப்புணர்வு வாகனம் செல்லும் வாக்குச்சாவடி மையம் மற்றும் செல்லும் பகுதிகள் குறித்து ஒவ்வொரு வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பயண அட்டவணை வைக்கப்படும்

மேலும் ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் விழிப்புணர்வு வாகனம் வரும் நாள் மற்றும் நேரம் குறித்து அறிவிப்பு பலகை வைக்கப்படும். விழிப்புணர்வு பணியானது வாக்குச்சாவடி மையங்கள் அமைந்துள்ள அரசு கட்டிடங்கள், அரசு பள்ளிக்கூடங்கள் சமுதாய நலக்கூடங்கள் ஆகிய இடங்களில் நடத்தப்படும் வாக்காளர்கள் மாதிரி வாக்குப்பதிவு இயந்திரத்தில் தங்களது மாதிரி வாக்கினை செலுத்தலாம்

எனவே வாக்காளர்கள் அனைவரும் தங்களது மாதிரி வாக்கினை செலுத்தி ஒப்புகைச் சீட்டில் (VVPAT – SLIP) தாங்கள் செலுத்திய வாக்கு விவரத்தினை (வரிசை எண், சின்னம், வேட்பாளர் பெயர், ஆகியவற்றை) தெரிந்து கொள்ளலாம், மாதிரி வாக்கு செலுத்தும் பொதுமக்களிடமிருந்து ஒப்புகை பெறப்படும்

எனவே வாக்காளர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வமுடன் மேற்படி விழிப்புணர்வு பயிற்சியில் கலந்துகொள்ள அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது என மாவட்ட துத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் மு.வீரப்பன், தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரான் ஜீத் சிங் கலோன், உதவி ஆட்சியர் (பயிற்சி) அனு, மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ஆசிரியர்

[email protected]

Recent News

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!