நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் வட்டாட்சியர் அலுவலகத்தில் இ-சேவை மையம் உள்ளது. இங்குள்ள வருவாய்துறை ஆன்லைன் சேவை சம்பந்தமான மையத்தில் சில நாட்களாக இரண்டு பேர் பணியில் இருக்க வேண்டிய நிலையில் ஒரு பணியாளர் மட்டுமே பணியில் உள்ளார்.
இதனால் வருவாய்துறை சம்பந்தமான சான்றிதழ் பெறுவதற்கும்,ஏனைய சேவைகளைக்கு விண்ணப்பிக்க மிகவும் காலதாமதம் ஏற்படுவதாக பொதுமக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
கூடுதலான பணியாளரை நியமிக்க உடனே நடவடிக்கை எடுக்குமாறு பொதுநலன் கருதி பொதுமக்கள் நலன்காக்கும் இயக்கம் மேற்கு மாவட்டம் சார்பில் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்


You must be logged in to post a comment.