ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹாவில் உலக பிரசித்தி பெற்ற மஹான் குத்புல் சுல்தான் செய்யது இப்ராஹிம் ஷஹீத் ஒலியுல்லாஹ் தர்ஹாவில் ஆண்டுதோறும் மத நல்லிணக்கத்திற்கான சந்தனக்கூடு திருவிழா பெரும் விமர்சியாக நடைபெறும் இதனைத் தொடர்ந்து இந்த வருடத்தின் 850ம் ஆண்டின் சந்தனக்கூடு எனும் மத நல்லிணக்க விழா வருகின்ற மே 9ல் தொடங்குகிறது. இதனைத் தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சந்தனக்கூடு திருவிழாவில் எவ்வித அசம்பாவிதம் நடைபெறாமல் இருப்பதற்கும் அமைதியான வழியில் திருவிழாவை நடத்துவதற்கு வருவாய் கோட்டாட்சியர் இராஜமனோகரன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஏர்வாடி தர்கா கமிட்டி நிர்வாகிகள் கீழக்கரை வட்டாட்சியர் பழனி குமார் கீழக்கரை டிஎஸ்பி மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

You must be logged in to post a comment.