ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹாவில் உலக பிரசித்தி பெற்ற மஹான் குத்புல் அக்தாப் சுல்தான் செய்யது இப்ராஹிம் ஷஹீத் ஒலியுல்லாஹ் தர்ஹாவில் வருடம் தோறும் மத நல்லிணக்கத்திற்கான சந்தனக்கூடு எனும் மத நல்லிணக்க விழா பெரும் விமர்சியாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த வருடத்தின் 851ம் ஆண்டின் சந்தனக்கூடு எனும் மத நல்லிணக்க விழா முதல் நிகழ்ச்சியாக ஏப் 29-ல் தொடங்குகிறது இந்த மவ்லிது ஷரீப் தர்ஹா மண்டபத்தில் மார்க்க அறிஞர்களால் தொடர்ந்து 23 நாட்களுக்கு இறை வசனம் ஓதப்படும். அதனைத் தொடர்ந்து மே 9-ம் தேதி பாதுஷா நாயகத்தின் பச்சை வர்ணக் பிறை கொடி யானை மேல் வைத்து குதிரைகள் படை சூழ ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு சிறப்புமிகு கொடியேற்றம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து உலக நன்மைக்காக சிறப்பு துவா ஓதப்பட்டது.
மேலும் முக்கிய நிகழ்ச்சியாக மே 21-ம் தேதி மாலை தொடங்கி மே 22-ம் தேதி அதிகாலை மேளதாளம் முழங்க யானைகள் அணிவிக்க, நாட்டிய குதிரைகள் நடனமாட ரதம் பவனி வர, அனைத்து சமுதாயத்தினரும் அணிவகுக்க, புனித மக்பராவில் சந்தனம் பூசப்பட்டு சந்தனக்கூடு எனும் மத நல்லிணக்க விழா நடைபெறும்
அதனை தொடர்ந்து மே 28-ம் தேதி நிறைவு நிகழ்ச்சியான அஸர் தொழுகைக்குப் பின் கொடியிறக்கம் நடைபெற்று அன்று இரவு 7.00மணிக்கு தப்ரூக் எனும் நெய் சோறு (எ) உணவு வழங்கப்பட்டு 851வது சந்தனக்கூடு எனும் மத நல்லிணக்க நிகழ்ச்சி நிறைவு பெறும்.இதனை காண யாத்திரைகள் திரளாக கலந்து கொள்ளுமாறு தர்கா கமிட்டி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
You must be logged in to post a comment.