ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்; ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக துவக்கம்..

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் கடந்த டிச.14ம் தேதி காலமானார். இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து இத்தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி (இன்று) நடைபெறும் என அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டது.

இந்தநிலையில், இன்று காலை 7 மணியளவில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. மாலை 6 மணிவரை நடைபெற இருக்கும் இத்தேர்தலுக்காக, 53 இடங்களில் 237 வாக்கு சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க 3 கம்பெனி துணை ராணுவனத்தினர், 2 ஆயிரத்து 600 காவல்துறையினர் உட்பட 3 ஆயிரம் பேர் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். 237 வாக்குச்சாவடிகளில் 9 மையங்கள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளன.

2 லட்சத்து 26 ஆயிரத்து 433 வாக்காளர்கள் வாக்களிக்க தேர்வாகியுள்ளநிலையில், அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க நேரிட்டால், வெயிலில் இருந்து தற்காத்துக்கொள்ள பந்தல்கள், நடக்க முடியாதவர்களுக்காக சக்கர நாற்காலிகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பூத் சிலிப் இல்லாத வாக்காளர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட 12 வகையான ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை வைத்து வாக்கு செலுத்தலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். பிப்ரவரி 8 ஆம்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலிலை அதிமுக, பாஜக, தேமுதிக, தவெக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளநிலையில், திமுக வேட்பாளர் சந்திரகுமார், நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமி, சுயேச்சைகள் உள்பட மொத்தம் 46 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!