ராமநாதபுரம் மாவட்டம் பாப்பாகுடி கிராமத்தில் பாவை பவுண்டேசன் சார்பாக சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. விழாவில் தமிழர்களின் கலாச்சார போட்டிகள் மற்றும் நடனங்கள் நடைபெற்றன. போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற்றவர்களுக்கு பெண்கள் சேவை மையம் ஒருங்கிணைந்த நிர்வாகி மோகனப்பிரியா கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். விழாவில் மகளிர் சுய உதவி குழுக்கள் மற்றும் கிராம பொது மக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை பாவை பவுண்டேசன் மண்டல ஒருங்கிணைப்பாளர் கோபுதாஸ் ஏற்பாடு செய்திருந்தார்.

You must be logged in to post a comment.