சாலை ஓரங்களில் கொட்டப்படும் ரசாயண கழிவுகள்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள குட்டம் கிராமத்தில் கருமலை தொடர் மலையாகவும், அதே போல அதன் அருகே கல்வார்பட்டி கிராமத்தில் ரெங்கமலை உள்ளது. இம்மலைகளின் உச்சியில் கோவில்கள் உள்ளன.

இதில் தேவிநாயக்கன்பட்டியில் இருந்து கருமலையின் மீது உள்ள மலைச்சாலை வழியாக ஒட்டன்சத்திரம் அருகே இடையகோட்டைக்கு செல்லும் சாலைகளின் ஓரங்களிலும், அதே போல மற்றொரு வழியான கல்வார்பட்டியில் இருந்து கருமலையின் மீது உள்ள மலைச்சாலை வழியாக ஒட்டன்சத்திரம் அருகே இடையகோட்டைக்கு செல்லும் மலைச்சாலையின் ஓரங்களிலும், திருப்பூர், கரூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து லாரிகளில் லோடு கொண்டு வரும் நபர்கள் சிலர் ரசாயனக் கழிவுகளை கொண்டுவந்து கொட்டிவிட்டு செல்கின்றனர்.

இம்மலை பகுதிகளில் ரசாயனக் கழிவுகள் கொட்டப்பட்ட இடங்களில் உள்ள மரங்கள் காய்ந்து வருகின்றன. மலைப்பகுதிக்குள்அவை கொட்டப்படுவதால் சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன், மழை பெய்யும்போது நிலத்தடி நீரில் அவை கலந்துவிடுகின்றன. மழைநீருடன் ரசாயனக் கழிவுகள் கலந்து ஓடைகளின் வழியாக மலை அடிவாரத்தில் உள்ள குளங்களுக்கும் விவசாயநிலங்களிலும் வருவதால் நிலத்தடி நீர் முற்றிலும் மாசு ஏற்படுகிறது. மேலும் விவசாய பயிர்கள் பாதிக்கப்படுகிறது. இரவு நேரத்தில், கருமலையில் ரசாயனக் கழிவு மூட்டைகளை கொண்டுவந்து கொட்டுபவர்களை கண்காணித்து, அதிகாரிகள் உரிய நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!