திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே சித்தர்கள் நத்தம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள கடவா குறிச்சி மலையின் கீழ் உள்ள தோட்டங்களில் எந்த விதமான அரசின் அனுமதியின்றி நிலக்கோட்டை ஒன்றியம் ஊராட்சி, முசுவனூத்து ஊராட்சியில் உள்ள ஒரு தனியார் மில்லில் இருந்து வெள்ளரிக்காய் ஊறுகாய் தயாரிக்கும் கம்பெனியில் இருந்து கழிவுகள் தினந்தோறும் டன் கணக்கில் வெளியேற்றப்படுவதாக அறியப்படுகிறது. அதே போல் கழிவுகளை சிலர் காண்ட்ராக்ட் பிடித்து வெளியே கொண்டுபோய் மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அழிக்கப்படுவதாக உறுதி அளித்து எடுத்துச் செல்கிறார்கள். ஆனால் அந்த மில்லின் அருகே உள்ள தரிசு காடுகளில் அப்படியே கொட்டி விடுகிறார்கள். இவ்வாறு கொட்டப்படும் இந்த கழிவுகளை பொதுமக்கள் அறியாமல் நல்ல நிலையில் உள்ளதாக எண்ணி கழிவுகளை எடுத்து செம்பட்டி பஸ் நிலையத்தில் வெள்ளரிக்காய் பிஞ்சு விற்பதற்காக கொண்டு சென்று அதனை தோல்சீவி அப்படியே பொதுமக்களுக்கு விற்று வருகிறார்கள்.
இது போக மீதி கிடைக்கக்கூடிய வெள்ளரிப்பிஞ்சு கழிவுகளை அந்தப் பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களுடைய வளர்பிராணகளான ஆடு, மாடு, கோழி போன்றவைகளுக்கு உணவாக அளிக்கின்றனர். இதனால் ஆடு மாடுகளுக்கு உடனடியாக உயிர் சேதம் ஏற்படவில்லை என்றாலும் குறிப்பிட்ட காலத்திற்கு பின்பு இந்த கழிவுகளை தின்ற கால்நடைகள் தொற்று நோயால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. மேலும் இங்கு கொட்டப்படும் கழிவுகளை சரியான முறையான நிலையில் அந்தக் கழிவுகளை அகற்ற படாத காரணத்தால் அந்தப் பகுதியில் துர்நாற்றம் கடுமையாக வீசுகிறது. அரசு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வது நல்லது.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









