இராமநாதபுரம் மாவடட்டம் ராஜா தினகர் உயர்நிலை பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினதத்தின் தொடரச்சியாக இன்று (07.06.2018) தமிழ்நாடு சுற்றுச்ச சூழல் துறை மற்றும் தேசிய பசுமைப்படை ஆகியவற்றின் சார்பாக மாவடட் ஆட்சித் தலைவர் நடராஜன், ‘பிளாஸ்டிக் மாசுவை முறியடிப்போம்” என்ற கருத்தை மையப்படுத்தி நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இவ்விழிப்புணர்வு பேரணியில் அறிஞர் அண்ணா நடுநிலைபப்ள்ளி, குமரன் நடுநிலப்பள்ளி, லூயிஸ் நடுநிலை பள்ளி, லெவல் மெட்ரிக்பள்ளி, ஆல்வின் மெட்ரிக்பள்ளி, கொழும்பாலம் உயர்நிலைப்பள்ளி, சுவார்ட்ஸ் மெட்ரிக் மேல்நிலைபள்ளி, ராஜாதினகர் R.C உயர்நிலைபப்ள்ளி, புனித ஜோசப்உயர்நிலைப் பள்ளி, புனிதஜோசப் உயர்நிலைபள்ளி, நேஷனல் அகாடமிக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சரஸ்வதி நடுநிலைப்பள்ளி, வேலுமாணிக்கம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ராஜா மேல்நிலைப்பள்ளி, டி.டி.விநாயகர் மேல்நிலைப்பள்ளி, முகமம்து தஸ்தகீர் மெட்ரிக் மேல்நிலை பள்ளி, ஹவுசிங் போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளைச் சார்ந்த மாணவ, மாணவியர் சுமார் 900கும் மேற்பட்டோர் இப்பேரணியில் கலந்து கொண்டனர்.
இப்பேரணியில்கலந்து கொணடு “பிளாஸ்டிக் தவிர்ப்போம், மண் வளம் காப்போம், மரம் வளர்ப்போம், காற்றில் மாசை தவிர்ப்போம், நீர், நிலம், காற்றின் தூய்மை நமது சுகாதாரத்தின் மேன்மை” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறும், விழிப்புணர்வை வாசகங்களை கோசமிட்டவாறும் ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இப்பேரணியில் முற்றிலுமாக பிளாஸ்டிக் பயன்பாட்டினை முற்றிலும் தவிர்க்க வலியுறுத்திடும் விதமாக பொதுமக்களுக்கு துணிப்பைகள் வழங்கபப் ட்டது. மேலும் பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீமைகள் குறித்தும், அதனை தவிர்த்திடுமாறு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இப்பேரணியானது ராஜா தினகர் உயர்நிலைப்பள்ளியில் தொடங்கி சிகில் ராஜவீதி, செய்யதம்மாள் மருத்துவமனை, வண்டிக்காரத் தெரு, அரண்மனைச் சாலை வழியாக இராஜா தினகர் உயர்நிலை பள்ளியில் நிறைவு பெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவடட் வன உயிரினக் காப்பாளர் டி.கே.அசோக்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இரா.முருகன், இராமநாதபுரம் மாவட்ட கல்வி அலுவலர் டி.பிரேம், ஆரோக்யா மருத்துவமனை மருத்துவர்கள் ஆர்.பரணிக்குமார், பி.வித்யா பரணிக்குமார், தேசிய பசுமைப்படை இராமநாதபுரம் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெர்னாடிட் உட்பட தலைமையாசிரியாக்ள், அரசு அலுவலர்கள், ஆசிரியார்கள், தேசியபசுமைப்படையின் ஒன்றிய பொறுப்பாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print











