கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி மற்றும் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம், மதுரை இணைந்து மேலாண்மை துறை சார்பாக மூன்று நாள் தொழில்முனைவோர் மேம்பாட்டு கருத்தரங்கம் கல்லூரி டீன் முனைவர். முஹம்மது ஜஹாபர் தலைமையிலும், கல்லூரி முதல்வர் முனைவர். அப்பாஸ் மைதீன் முன்னிலையிலும் நடைபெற்றது.

கல்லூரி மேலாண்மைத்துறைத் தலைவர் அப்பாஸ் மாலிக் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக இராமநாதபுரம் மாவட்ட தொழில் முனைவோர் மைய பொது மேலாளர் மாரியம்மாள் கலந்துகொண்டு தமிழ்நாட்டில் 45 சதவீத மக்களுக்கு தொழில்முனைவோர் மூலமாகத் தான் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. மத்தியஇ மாநில அரசுகள் GREEN INDIA, MAKE IN INDIA, STAND UP INDIA போன்ற பல திட்டங்கள் மூலம் தொழில் முனைவோர்களை ஊக்குவித்து நமது நாட்டு மக்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்றி அதன் மூலம் நாட்டை முன்னேற்றுவதற்கு வழிவகை செய்து வருகிறது.
நமது இராமநாதபுரம் மாவட்டத்தில் 3 வருடங்களாக தொழில்முனைவோருக்காக ரூ. 2 கோடி ரூபாய் மானியமாக வழங்கி வருகிறது. மேலும் மேலாண்மைத்துறை மாணவர்களாகிய நீங்கள் ஒரு கம்பெனியை நிர்வகிக்கும் திறமையுடன் ஏன் புதிய தொழிலை தொடங்கி அதன் மூலம் பல மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கினால் நாட்டின் பொருளாதாரம் உயர்வதற்கு வழிவகை செய்யுமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.
இராமேஸ்வரம் PEARL INDUSTRY உரிமையாளர் ரெகுநாத், முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அலாவுதீன் மற்றும் செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ரஜபுதீன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சிறப்புரை வழங்கி சிறப்பித்தனர். நிகழ்ச்சியின் இறுதியாக நன்றியுரையை மேலாண்மைத் துறை துணைப் பேராசிரியர் சாகுல் ஹமீது வழங்கினார்.
இக்கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை மேலாண்மைத் துறை துணைப் பேராசிரியர்கள் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் நஜ்முதீன் ஆகியோர் செய்திருந்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









