ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலின் உண்டியல் எண்ணும் பணி நிறைவு

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாத ஸ்வாமி திருக்கோவில் கடந்த மாதம் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது, அதனைத்தொடர்ந்து ஒரு மாதம் கழித்து கோவில் உண்டியலில் பெறப்பட்ட காணிக்கைகள் எண்ணும் பணி இன்று கோவிலின் மண்டபத்தில் நடைபெற்றது. ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவிலுக்கு பாத்தியப்பட்ட பத்ரகாளியம்மன் கோவில், நம்புநாயகி அம்மன் கோவில், ராமர் தீர்த்தம், லட்சுமண தீர்த்தம், ஜடாயு தீர்த்தம் உள்ளிட்ட கோவில்களில் பக்தர்கள் மூலம் தரப்பட்ட காணிக்கைகளை கோவில் பணியாளர்கள் மூலம் கைப்பற்றி காணிக்கைகள் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு உண்டியல் எண்ணும் பணி நடைபெற்று வந்தன.உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் ஊழியர்கள் மற்றும் ராமேஸ்வரத்தில் பல்வேறு பகுதிகளில் உழவாரப்பணி மேற்கொள்பவர்கள் உள்ளிட்டோர் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி உண்டியல் எண்ணும் பணியை மேற்கொண்டனர். ராமேஸ்வரம் ராமநாத ஸ்வாமி திருக்கோவில் கடந்த ஒரு மாதத்தில் பெறப்பட்ட காணிக்கைகளின் உண்டியல் எண்ணும் பணி நிறைவு பெற்றுள்ளது. அதில் உண்டில் எண்ணப்பட்டதில் ஒரு கோடியே 51லட்சத்து 53ஆயிரத்து 776 ரூபாய் பணமும், 101 கிராம் 200 மில்லிகிராம் தங்கம், 6 கிலோ 630 கிராம் வெள்ளி கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!