முதல்வர் ஸ்டாலின் விட்ட டோஸ்.. “என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்” வெள்ளத்துரை சஸ்பெண்ட் ரத்தான பின்னணி..
ஏடிஎஸ்பி வெள்ளத்துரை பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு பின்னர் சஸ்பெண்ட் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் உள்துறையில் உள்ள உயர் அதிகாரி ஒருவர் மீது முதல்வர் ஸ்டாலின் அதிருப்தியில் இருப்பதாகவும், அவரை கண்டித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
முதல்வர் ஸ்டாலினின் கவனத்துக்கு கொண்டு செல்லாமலேயே ஏடிஎஸ்பி வெள்ளத்துரைக்கு சஸ்பெண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும், தன்னிச்சையாக இந்த முடிவு எடுக்கப்பட்டதால், முதல்வர் ஸ்டாலின் உள்துறை செயலகத்தில் முக்கிய பொறுப்பில் உள்ள அதிகாரி மீது அதிருப்தி அடைந்ததாகவும், உடனடியாக சஸ்பெண்டை ரத்து செய்ய சொன்னதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் குற்ற ஆவண காப்பக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்தவர், எஸ். வெள்ளத்துரை. இவர், தமிழக காவல்துறையில் “என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்’ என்று அழைக்கப்பட்டவர். ரவுடிகளை ஒழிப்பதற்கு உயர் அதிகாரிகள் இவரை பயன்படுத்தி வந்தனர் என்ற பேச்சும் உண்டு. இவரது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு ஆகும்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கட்டப் பஞ்சாயத்துகள் மற்றும் தொழிற்சாலை பகுதிகளில் தொழில் நிறுவனங்களுக்கு தொல்லை தரும் நபர்களை தடுப்பதற்கான சிறப்புப் படை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார் வெள்ளதுரை. தற்போது திருவண்ணாமலை மாவட்ட குற்ற ஆவண காப்பக ஏடிஎஸ்பி ஆக பணியாற்றி வந்தார் வெள்ளதுரை.
வெள்ளத்துரை ந பணியில் இருந்து ஓய்வு பெற இருந்தார். இந்த நிலையில் அவரை நேற்று பணியிடை நீக்கம் செய்து அரசு உத்தரவிட்டது. கடந்த 2013 ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில் திருப்பாச்சேத்தி போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட குமார் என்ற கொக்கி குமார் என்பவர் போலீஸ் காவலின் போது மர்மமாக மரணம் அடைந்தார். இதுதொடர்பான வழக்கை சிபிசிஐடி. போலீசார் விசாரித்து வந்தனர் அந்த வழக்கு சம்பந்தமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது..

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









