மதுரையில் 7-வது சீனியர், 4-வது ஜூனியர் மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா வலுதூக்கும் போட்டி காந்தி அருங்காட்சியகம் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மதுரை, சென்னை, கன்னியாகுமரி, திண்டுக்கல், சிவகங்கை, ராம நாதபுரம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 130-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். வீரர்-வீராங்கனைகளின் உடல் எடைகளுக்கு ஏற்ப எவ்வளவு எடை தூக்கினார்களோ அவர்கள் வெற்றியாளர் ஆனார்கள். மேலும் முதல் மூன்று இடங்கள் பிடித்தவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டது. இதில் வெற்றி பெற்று தேசிய போட்டிக்கு தகுதி பெறும் தமிழக பாரா வலுதூக்குதல் வீரர்-வீராங்கனைகள் உத்தரபிர தேச மாநிலத்தில் மார்ச் 16, 17, 18 தேதிகளில் நொய்டாவில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்க இருக்கின்றனர்.
போட்டியில் ஆண்கள் பிரிவில் கிருஷ்ணமூர்த்தி 140 கிலோ எடையை தூக்கியும், பெண்கள் பிரிவில் நித்யா 80 கிலோ எடையை தூக்கியும் சிறந்த வீரர், வீராங்கனைகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். போட்டியை தேனி ஆனந்தம் செல்வராஜன், மணவாளன், மாற்றுத்திறனாளி சங்கத்தின் தலைவர் பூபதி, மதுரை ஐகோர்ட்டு வக்கீல் சாமி துரை ஆகியோர் பங்கேற்று பரிசுகளை வழங்கி மாற்றுத்திறனாளி களை கவுரவப்படுத்தினர். போட்டியை தியான்சந்த் விருது பெற்றவரும், மாவட்ட பயிற்சியாளருமான ரஞ்சித்குமார் மற்றும் குமரேசன் ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினார்கள்.
You must be logged in to post a comment.