இராமநாதபுரம், செப்.13 – இராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் ராமநாதபுரத்தில் தனியாா் வேலைவாய்ப்பு சிறப்பு முகாம் (செப்.16) நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் பா. விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் நூற்றாண்டை யொட்டி, ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாவட்ட நிா்வாகம், ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் ராமநாதபுரம் இன்பன்ட் ஜீசஸ் மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளியில் தனியாா் வேலைவாய்ப்பு சிறப்பு முகாம் செப்.16 ல் நடைபெற உள்ளது.
இம்முகாமில், 100 க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று, தங்கள் நிறுவனத்துக்கு தேவையான பணியாளா்களை தோவு செய்ய உள்ளனா். 8 ஆம் வகுப்பு தேறியோர் முதல் முதுகலை, பொறியியல் பட்டதாரிகள் வரை அனைத்து நிலை கல்வித் தகுதி உடையோர் இம் முகாமில் பங்கேற்று, தங்கள் கல்வித் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு பெறலாம். முகாமில் பங்கேற்க விரும்புவோா் இணைய தளம் மூலம் முன் பதிவு செய்து கொள்ளலாம்.
இம்முகாமில் பங்கேற்க விரும்பும் தனியாா் நிறுவனங்கள், ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அல்லது மின்னஞ்சல் மூலம் அல்லது 04567-230 160 என்ற தொலைபேசி எண் வாயிலாக தொடா்பு கொள்ளலாம். முகாமில் பங்கேற்கும் பணி நாடுநா், தங்களின் சுயவிவரக் குறிப்பு, கல்விச் சான்றுகள், குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, புகைப்படம் ஆகியவற்றுடன் முகாமில் பங்கேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









