மேட்டுப்பாளையத்தில் குட்டியுடன் சுற்றித்திரிந்த காட்டு யானையை பத்திரமாக வனத்துறையினர் வனப்பகுதிக்கு அனுப்பி வைத்தனர்..
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் 30.12.2024 இன்று காலை 8.30 மணியளவில் குட்டியுடன் ஒரு பெண் யானை மங்கலக்கரைபுதூர் பகுதியில் இருப்பதாக தகவல் கிடைக்கப்பட்டதை தொடர்ந்து உடனடியாக வனத்துறை அதிகாரிகள் வனப்பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து விரைந்து சென்று யானையையும் குட்டியும் பார்ப்பதற்கு அப்பகுதியில் பொதுமக்கள் கூட்டம் கூடியதை அடுத்து பொதுமக்களை பாதுகாப்பு கருதி வனத்துறையினர் காரமடை காவல்துறை உதவியுடன் பொதுமக்களை அங்கிருந்து அப்புறப்படுத்திய மேட்டுப்பாளையம் சிறுமுகை மற்றும் காரமடை வனத்துறை குழுவினர் நண்பகல் சுமார் 12 மணியளவில் குட்டியுடன் உள்ள பெண் யானையை நெல்லி மலை காப்பு காட்டுகாட்டிற்குள் பத்திரமாக அனுப்பி வைத்தனர் குட்டியுடன் இருந்த பெண் யானையை பத்திரமாக அனுப்பி வைத்த வனத்துறையினரை வன ஆர்வலர்கள் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகிறார்கள்.
You must be logged in to post a comment.