உலக யானைகள் நாள் (World Elephant Day) ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட், 12ல் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் கொண்டாடப்படுவதன் நோக்கம் யானைகளை பாதுகாப்பதே ஆகும். இன்றைக்கு உலகத்தில் உள்ள 65 அமைப்புகள் மற்றும் யானைகளை கொண்ட நாடுகள் இந்த தினத்தை கொண்டாடி வருகின்றன. இந்த தினத்தில் தனியார் வளர்க்கும் யானைகளை பாதுகாப்பதும் ஒரு நோக்கமாகும். முதன் முதலில் இந்த தினம் 2012 ஆக.,12ல் கொண்டாட ஆரம்பிக்கப்பட்டது. ‘வனத்திற்குள் திரும்பு’ என்ற ஆங்கிலப் படத்தை வில்லியம் சாட்னர் என்பவர் எடுத்தார். இந்த படத்தின் கதையே ஒரு தனியார் வளர்க்கும் யானையை, காட்டிற்குள் மீண்டும் விடுவது பற்றியது. இந்த படம் 2012 ஆக.,12ல் வெளியானது. அன்றைய தினம் முதல் ‘உலக யானைகள் தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது
இந்த யானை தினத்தின் முக்கிய நோக்கம் ஆப்ரிகா மற்றும் ஆசிய கண்டங்களில் உள்ள யானைகளை பாதுகாத்து மக்களின் மத்தில் ஒரு விழிப்புணர்வை உண்டாக்குவதாகும். ஆப்ரிக யானைகள் ‘Vulnerable (பாதிக்கப்பட்டு வரும்)” மற்றும் ஆசிய கண்டத்தின் யானைகள் “Endangered(அழிந்து வரும் )” என “International Union for Conservation of Nature (இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம்)” என்ற அமைப்பால் அடையாளம் காட்டப்பட்டுள்ளது.
இத்தனை முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் இன்று வரை யானை தந்தத்திற்கு அதிமான மதிப்பு இருப்பதால் தந்த கொள்ளையர்கள் இந்த அபூர்வ மிருகத்தை கொன்ற வண்ணம்தான் உள்ளனர்.
அதை தவிர்த்து இந்தியா போன்ற நாடுகளில் யானைகளில் வழித்தடங்களில் சுற்றுலா குடில்கள் அமைத்து யானைகளின் வாழ்வாதாரத்தை சுகாதாரமற்றதாக ஆக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடதக்கதாகும். ஆனால் இன்றைய நிலையில் யானை அவசியம் பாதுகாக்கப்பட வேண்டிய மிருகம் என்பதில் ஐயமில்லை.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print











